அடுத்த அதிர்ச்சி! ஆண்நண்பருடன் பேசிய விதவை கூட்டு பலாத்காரம்.. நாமக்கல்லில் 4 பேர் கொடூரச்செயல்
நாமக்கல்: நாமக்கல்லில் ஆண்நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆண் நண்பரை தாக்கிவிட்டு கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் ஒருவரை தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே பதிவாகி வருகின்றன.
இந்நிலையில் தான் நாமக்கல் மாவட்டத்தில் கணவரை இழந்து தனியாக வசித்த பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது.

ஆண்நண்பருடன் பேசிய பெண்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது பெண். திருமணமான நிலையில் இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் அவர் தனியாக வசித்து வருகிறார். இவர் ஆண் நண்பருடன் மே 19ம் தேதி நாமக்கல் அருகே உள்ள வீராணம் ஏரி பகுதிக்கு மாலையில் சென்றார். அங்கு இருவரும் பேசி கொண்டிருந்தனர். இந்த வேளையில் 4 பேர் அங்கு வந்தனர். இருவரையும் மிரட்டி தாக்கினர்.

கூட்டு பலாத்காரம்
மேலும் அந்த பெண்ணின் ஆண் நண்பரை கட்டிபோட்டதாக கூறப்படுகிறது. அதோடு அந்த பெண்ணை தனியாக தூக்கி சென்று இரவு 11 மணி வரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் அணிந்திருந்த தங்க நகைகள் ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி சென்றனர்.

3 பேர் கைது
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வீசாணம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்(20), நவீன் குமார்(21) மற்றும் முரளி(21) ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். நகை, பணம் கைப்பற்றப்பட்டது.

இன்னொருவருக்கு வலைவீச்சு
கைது செய்யபட்ட நபரில் நவீன்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் விருதுநகர், வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்த நிலையில் தான் நாமக்கல் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications