Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாத்தாவை போல் தாயும் பலி.. விஷம் கலந்த சிக்கன் ரைஸால் குடும்பத்தையே காலி செய்த மாணவர்.. ஷாக் காரணம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல்லில் சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்த வழக்கில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி மாணவனின் தாத்தா நேற்று பலியான நிலையில் இன்று அவரது தாயும் பலியானார். இந்நிலையில் தான் சிக்கன் ரைஸில் விஷம் கலந்து குடும்பத்தை கொன்றது ஏன்? என்பது பற்றிய விஷயத்தை கல்லூரி மாணவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்தவர் நதியா. இவரது மூத்த மகன் பெயர் பகவதி (வயது 20). தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். பகவதிக்கு ஆதி (18) என்ற தம்பி உள்ளார்.

Now Mother died after grandfather arrested College student who poisoned chicken rice and killed 2 in Namakkal

இந்நிலையில் தான் கடந்த 30ம் தேதி பகவதி அருகே உள்ள ஹோட்டலில் இருந்து சிக்கன் ரைஸ் வாங்கி வந்து தனது அம்மா, தம்பிக்கு கொடுத்தார். மேலும் எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தில் வசிக்கும் நதியாவின் தந்தையும், பகவதியின் தாத்தாவுமான சண்முக நாதன் (73) என்பவருக்கும் கொடுத்து அனுப்பினார்.

இந்த ரைஸை சாப்பிட்ட சண்முக நாதன் மற்றும் நதியா ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் நேற்று சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி.. அதிர்ச்சி “ட்விஸ்ட்”.. பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது அம்பலம்!


இதையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த சிக்கன் ரைஸை ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது அதில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தது தெரியவந்தது. அதோடு அதனை செய்தது பகவதி தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பகவதியை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

இந்த விசாரணையின்போது பெண்களுடன் பழகுவது தொடர்பாக தாய் நதியா மற்றும் தாத்தா சண்முகநாதன் கண்டித்து திட்டியதாகவும், இதனால் சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே தான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பகவதியின் தாய் நதியா இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். நேற்று நதியாவின் தந்தை (பகவதிக்கு தாத்தா) பலியான நிலையில் இன்று பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக இந்த சம்பவத்தில் பகவதி மற்றும் அவரது தம்பி ஆதி ஆகியோர் பாதிக்கப்படவில்லை. இருவரிடமும் நடத்திய விசாரணையில் தான் பகவதி சிக்கன் ரைஸில் விஷம் கலந்ததை போலீசார் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+