அப்டின்னா நீயும் "நிர்வாணமாக" வீடியோ காலில் வா.. அதிர்ந்து போன தாய்.. தறி கெட்ட தமிழ்ச்செல்வன்!

பெண்களை ஆபாசமாக மிரட்டிய நாமக்கல் இளைஞர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: வீடியோ காலில் மகள் நிர்வாணமாக வந்து நின்றாள்.. உடனே காதலன், மகளின் அம்மாவையும் நிர்வாணமாக வீடியோ காலில் வரும்படி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரு விதவை பெண் வாழ்ந்து வருகிறார்.. இவருக்கு ஒரு மகனும், வயசுக்கு வந்த ஒரு மகளும் உள்ளனர்.. மகள் ஸ்கூலில் படித்து வருகிறார்.. தற்போது வீட்டிலேயே ஆன்லைன் கிளாஸ் நடந்து வருகிறது.

அம்மாவும், அண்ணனும் வேலைக்கு போய்விட்டால், பகலில் சிறுமி வீட்டில் தனியாகத்தான் இருப்பாள்.. ஆன்லைன் கிளாசும் ஒருசில மணிநேரம் என்பதால், எந்நேரமும் செல்போனிலேயே விழுந்து கிடந்துள்ளார். ஆன்லைன் கிளாசுக்கு ஸ்மார்ட்போன்தான் தேவை.. அதனால், அந்த செல்போனில்தான் சிறுமி நேரத்தை கழித்து வந்திருக்கிறாள்.

நிர்வாண போட்டோ

நிர்வாண போட்டோ

ஒருநாள், விதவை பெண்ணுக்கு வாட்ஸ்அப் நம்பரில் நிர்வாண போட்டோ ஒன்று வந்தது.. அதற்கு பிறகு வாய்ஸ் மெசேஜ் ஒன்றும் அத்துடன் சேர்ந்தே வந்தது.. அந்த போட்டோவை பார்த்த பிறகுதான் தெரிந்தது, அது தன்னுடைய மகள் என்று... இதனால் அதிர்ந்து போன தாய், மகளை கூப்பிட்டு என்ன ஏதென்று விசாரித்திருக்கிறார். அப்போதுதான் மகள் கதறி கதறி அழுது, சொன்னதை கேட்டு மிரண்டு போய்விட்டார்.

இன்ஸ்ட்டாகிராம்

இன்ஸ்ட்டாகிராம்

இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு இளைஞன் சிறுமிக்கு பழக்கமாகி இருக்கிறார்.. அவர் விருதுநகரை சேர்ந்தவராம்.. பெயர் தமிழ்ச்செல்வன்.. ஆரம்பத்தில் சாதாரணமாகதான் பேசி வந்துள்ளார்.. ஒருகட்டத்தில் காதலிக்கிறேன் என்று சொல்லி சிறுமியை தன் விலையில் விழ வைத்துள்ளார். அந்த சிறுமியும், காதல் பேச்சில் மயங்கி விழுந்துவிட்டாள்.

வீடியோ கால்

வீடியோ கால்

இந்நிலையில், ஒருநாள் வீடியோ கால் செய்த இளைஞன், அந்த சிறுமியிடம் '' உன்னை நிர்வாணமாக பார்க்க ஆசையா இருக்கு.. வீடியோ அனுப்பு" என்று கேட்டுள்ளார்.. உடனே அந்த சிறுமியும், இளைஞன் கேட்டபடியே வீடியோவில் வந்து நின்றாராம்.. அதை தமிழ்செல்வன் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்து கொண்டுள்ளார்.

நிர்வாணம்

நிர்வாணம்

பிறகு அந்த சிறுமியிடம், "நான் கேட்டதுமே இப்படி வந்து நிர்வாணமாக நிற்கிறாயே.. இப்படித்தான் யார் கேட்டாலும் நிர்வாணமாக வீடியோ கால் செய்வியா" என்று கேட்டுள்ளார்.. பிறகு உன் போட்டோக்களை என் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்க போகிறேன், உன் அம்மாவுக்கும் அனுப்பி வைக்க போகிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.. இதை வெறும் மிரட்டல் என்று சிறுமி நினைத்தாராம்.. பிறகுதான் உண்மையிலேயே அந்த போட்டோக்களை அம்மாவுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது.

விதவை பெண்

விதவை பெண்

இவ்வளவும் மகள் சொல்லியதை கேட்டு அப்படியே உறைந்து போய்விட்டார் அந்த விதவை பெண்.. இதையடுத்து இளைஞன் அனுப்பிய வாய்ஸ் மெசேஜை ஓபன் செய்து கேட்டார்.. அதில், "உன் மகள் போட்டோவை இந்த மாதிரி யாருக்கும் நான் அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால், நீயும் வீடியா காலில் நிர்வாணமாக வா" என்றாராம். இதை கேட்டு பதறி போன அந்த அம்மா உடனடியாக ராசிபுரம் மகளிர் போலீசுக்கு புகார் அளித்தார். ஆனால், அவரது புகாரை யாருமே சரியாக அங்கு எடுத்து கொள்ளவில்லையாம்.

கைது

கைது

இதனால் மனம் நொந்த அந்த விதவை பெண், நாமக்கல் மாவட்ட எஸ்பியையே நேரில் சந்தித்து, கதறி அழுது தன்னுடைய புகாரை தந்துள்ளார்.. இதையடுத்து எஸ்பி, சிறுமியின் இன்ஸ்டாகிராமில் இருந்த சேட்டிங்கை முழுவதுமாக ஆய்வு செய்தார்.. அனைத்து புகாரும் உண்மை என தெரியவந்ததை அடுத்து, பதுங்கி கிடந்த தமிழ்செல்வனை அதிரடியாக கைது செய்தார்.. அதேபோல, பாதிக்கப்பட்ட பெண் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்காத அந்த போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அதிகாரிகளையும் கண்டித்தார்... இப்போது "இன்ஸ்ட்டா ரோமியா" தமிழ்செல்வன் ஜெயிலில் இருக்கிறார்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+