ஜெய்ஸ்ரீராமுக்கு பொங்கினாங்களே! பாகிஸ்தான் ஜிந்தாபாத்னு திமுகவே கூவுறாங்களே. இது ஆபத்து! அண்ணாமலை
நாமக்கல்: திமுகவினர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து அவர் சேந்தமங்கலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசுகையில், அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி தற்போது தமிழகத்தில் நடக்கவில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஆட்சி நடக்கிறது. அதுதான் ஜனநாயகம் என நினைக்கிறார்கள்.
பழங்குடியின மக்களுக்கு திமுக தலைமையிலான அரசு எதிராக உள்ளது. மத்திய அமைச்சரவையில் 11 பேர் பழங்குடியினத்தை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் ஒருவர் கூட பழங்குடியினத்தை சேர்ந்தவர் இல்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என தெரிவித்திருந்தது.
ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்கியது. படித்த இளைஞர்களுக்கு எதிரான அரசாக திமுக தலைமையிலான அரசு உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமே தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார்.
தமிழக முதல்வரை பொறுத்தவரை குடும்ப மட்டுமே நன்றாக இருக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். பாஜக ஆட்சி என்பது அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி. திமுக ஆட்சி மகன், மருமகனுக்கான ஆட்சி. ஊழல் குறித்து திமுக பேசக் கூடாது. திமுக அமைச்சர்களில் 11 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின் போது திமுகவினர் பாகிஸ்தான் டீசர்ட் போட்டுக் கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டனர். திமுகவுக்கு வாக்கு வங்கி வேண்டும் என்பதற்காகவே தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. இதுவரை நடக்காத வகையில் ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். தமிழகம் வன்முறைக் களமாக மாறியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார். கடந்த 25 ஆம் தேதி மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications