உயிரையே பறித்த ஒரு நாள் வேலை.. சாவு இப்படியா வரனும்.. பெக்லைனோடு.. கோயில் கிணற்றில் சோகம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோவில் அருகே உள்ள ஊர் கிணற்று பக்கவாட்டு பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தப்படுத்திய டிரைவர், எதிர்பாராதவிதமாக பொக்லைனுடன் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 8-வது வார்டு மாங்குட்டை பாளையத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்த கோவில் அருகே உள்ள ஊர் கிணற்று பக்கவாட்டு பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடந்து வந்தது.

இந்த சுத்தப்படுத்தும் பணியினை கைலாசம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மூர்த்தி (வயது 35) என்பவர் செய்து வந்தார். டிரைவர் மூர்த்தி பொக்லைன் எந்திரம் மூலம் கிணற்றை ஒட்டிய பகுதியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரம் அருகே இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இதில் டிரைவர் மூர்த்தி வெளியே வர முடியாமல் பொக்லைன் எந்திரத்துக்குள் சிக்கி சில நிமிடங்களில் இறந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். போலீசாரும் சம்பவம் குறித்து கேள்விப்பட்டு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது.
அதன்பின்னர் கிரேன் உதவியுடன் பொக்லைன் எந்திரத்தையும் தீயணைப்பு வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து திருச்செங்கோடு டவுன் போலீசார், மூர்த்தியின் உடலை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களாக கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் இருந்தவர்கள் விடுமுறையில் சென்றுவிட்டார். தற்காலிகமாக டிரைவர் மூர்த்தி வேலைக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோயில் அருகே கிணற்றை சுத்தப்படுத்தும் போது டிரைவர் இறந்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications