ரூ.70 ஆயிரத்துக்கு பிறப்புச்சான்றிதழ்? ராசிபுரம், கொல்லிமலையில பிறப்பு சான்றிதழ்கள் அதிரடி ஆய்வு

Subscribe to Oneindia Tamil

ராசிபுரம்: குழந்தைகளை வாங்கி விற்கும் புரோக்கர் அமுதா, ரூ.70ஆயிரத்திற்கு பிறப்புச்சான்றிதழை வாங்கித்தருவதாக கூறியிருந்த நிலையில், ராசிபுரம், கொல்லிமலையில் வழங்கப்பட்ட சுமார் 5500 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா என்பவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

 Rasipuram, Kolimalai Birth Certificates verification started today over child broker amudha speech

இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஏழை குழந்தைகள் மற்றும் முறைதவறி பிறந்த குழந்தைகளை விலைக்கு வாங்கி, அதனை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சட்டவிரோதமாக விற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தர்மபுரியைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியிடம் அமுதா பேசும் ஆடியோ உரையாடல் ஒன்று நேற்று வாட்ஸ் அப்பில் வைரலானது. அதையடுத்து அமுதாவும் அவரது கணவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அமுதா பேசிய ஆடியோ உரையாடலில், குழந்தை வாங்கும் தம்பதிகளுக்கு, அவர்களுடைய குழந்தை போல் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்து தரப்படும் என்றும் இதற்கு நகராட்சியில் ரூ.70 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறியிருந்தார். இதையடுத்து சமீபத்தில் ராசிபுரத்தில் வழங்கப்பட்ட சுமார் 4500 பிறப்பு சான்றிதழ்களின் உண்மை தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதேபோல் கொல்லிமலையில் வழங்கப்பட்ட சுமார் 1000 பிறப்பு சான்றிதழ்களையும் ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+