Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுமியின் உயிரை பறித்த ஷவர்மா.. 43 பேர் பாதிப்பு.. நாமக்கல்லில் ஷவர்மா விற்க தடை.. கலெக்டர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கெட்டுப்போன ஷவர்மாவை விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் நகரில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் தவக்குமார். இவரின் மனைவி மற்றும் மகள் கலையரசி, மைத்துனர் ஆகிய நான்கு பேர் பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் சவர்மா பார்சல் வாங்கி வந்துள்ளனர் .

Shawarma death in Namakkal 43 people were affected Collector Ban on sale of Shawarma in Namakkal

இதே போல நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தனக்கு பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 13 பேருக்கு ட்ரீட் கொடுப்பதற்காக அதே உணவகத்தில் சவர்மா வாங்கியதாக தெரிகிறது. இந்த சூழலில் 13 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது .இதை அடுத்து கல்லூரி விடுதி ஊழியர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனிடையே இதே உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட தவக்குமாரின் 14 வயது மகள் கலையரசி மற்றும் அவரது அம்மா சுஜாதா, அத்தை கவிதா, மாமா பூபதி ,மாமன் மகள் சுனோஜி ஆகியிருக்கும் வாதி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கலையரசி மட்டும் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பினார். மற்ற நால்வருக்கும் வயிற்றுப்போக்கு வாந்தி அதிகமாகவே நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த சூழலில் மாணவி கலையரசி வாந்தி , மயக்கம் ஏற்பட்டு இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார் . இவரின் உடலை மீட்ட போலீசார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சவர்மா சாப்பிட்ட 17 பேரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலின் பேரில் உணவகத்தை சோதனையிட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

கெட்டுப்போன ஷவர்மா விற்பனை செய்த உணவக உரிமையாளர், சமையல்காரர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டங்களில் ஷவர்மா விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கேரள மாநிலம் காசர்கோடு செருவத்தூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி தேவாநந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதால் தேவநந்தாவுக்கு ஃபுட் பாய்சன் ஆனதாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மங்களூரைச் சேர்ந்த முகம்மது அனஸ், மற்றும் ஷவர்மா தயாரித்த நேபாளத்தைச் செர்ந்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். தரமில்லாத சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் கடந்த 2012 ஜூலையில் திருவனந்தபுரத்தில், கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள ஷவர்மா கடைகளில் கெட்டு போன இறைச்சி உள்ளதா? என உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபும், திருப்பூர் மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக மதுரை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தி கெட்டுப்போன தரமில்லாத உணவுப்பொருட்களை குப்பையில் கொட்டினர். அப்படியிருந்தும் தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட மூன்று பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி கெட்டுப்போன உணவுப்பொருட்களை விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல் வைத்தாலும் அதையும் மீறி உயிருக்கு ஆபத்தான வகையில் உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இன்றைய தினம் நாமக்கல் நகரில் ஒரு சிறுமியின் உயிர் அநியாயமாக பலியாகியுள்ளது. 43 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+