நாமக்கல் அருகே அதிகாலை நடந்த கொடூரம்.. 3 பேர் பலியான காரில் கட்டுக்கட்டாக பணம்.. வெளிவந்த ஷாக் தகவல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இன்று அதிகாலை கார் விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காரில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல மர வியாபாரி மார்த்தாண்டம் ராஜன், கொல்லிமலையை சேர்ந்த இடைத்தரகர் செல்வகுமார், கொல்லிமலை வனச்சரக ரேஞ்சர் ரகுநாதன் ஆகிய 3 பேர் இன்று அதிகாலையில் கொல்லிமலையில் இருந்து சேலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது பேளுக்குறிச்சி அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தார், மோளப்பாளையம் பேருந்து நிழற்குடை அருகே உள்ள கம்பி வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான காரில் கட்டுக்கட்டாக பல லட்சம் பணம் இருந்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மர வியாபாரி மார்த்தாண்டம் ராஜன், இடைதரகர் செல்வகுமார், கொல்லிமலை வனச்சரக ரேஞ்சர் ரகுநாதன் ஆகிய மூவரும் மரம் வெட்டி வியாபாரம் செய்ய கட்டிங் மிஷின் வாங்க சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொல்லிமலை வனச் சரக பகுதியில் ஏற்கனவே முறைகேடாக மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. தற்போது மர வியாபாரிகளுடன் ஒரே காரில் சென்றபோது வனச் சரகர் ரகுநாதன் விபத்தில் பலியாகி இருப்பதன் மூலம் மரம் வெட்ட கொல்லிமலை வனத்துறை ரேஞ்சர் ரகுநாதன் உடந்தையாக இருந்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய வாகனத்தில் கட்டுக் கட்டாக பணம் இருந்தால் இது யாருக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட பணம்? இந்த பணத்தை மரக்கடத்தல் கும்பலுக்கு தர எடுத்துச் சென்றனரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்லிமலையில் அவர்கள் தங்கி இருந்த விடுதி மற்றும் அவர்கள் சந்தித்த நபர்களை விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications