சிறையை காட்டி பாஜகவை அச்சுறுத்த முடியாது.. தொண்டர்கள் மீது கைவைத்தால் தக்க பதிலடி.. கேபி ராமலிங்கம்!
நாமக்கல்: தமிழக அரசு சிறையை காட்டி பாஜக-வை அச்சுறுத்த முடியாது என்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா ஆலயத்தின் பூட்டை உடைத்து நுழைந்ததாக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகஸ்ட் 14ம் தேதி ராசிபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவ சிகிச்சைக்கு பின் சேலம் மத்திய சிறையில் இருந்த அவருக்கு, புதன்கிழமை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர் திராளான தொண்டர்களுடன் சேலத்தில் இருந்து வாகனங்கள் பின் தொடர ராசிபுரம் வந்தார். ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த பாரதமாதா உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கேபி ராமலிங்கம் பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேபி ராமலிங்கம் கூறுகையில், நாட்டில் 75வது சுதந்திர தினவிழாவையொட்டி தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு பாஜக சார்பில் நடந்தது. அப்போது பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா எழுப்பிய பாரதமாதா ஆலயத்தில் மரியாதை செலுத்த சென்றோம்.

குற்றச்சாட்டு
ஆனால் மரியாதை செலுத்த அனுமதியளித்துவிட்டு, காவல்துறையினர் ஆலயத்தை பூட்டிவைத்துவிட்டார்கள். அதனால் பூட்டை அப்புறப்படுத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். இதற்காக வழக்கு தொடுத்து சிறையில் அடைத்தனர்.

பாஜகவை அச்சுறுத்த முடியாது
பாஜக-வை பொறுத்தவரை சிறையை காட்டியெல்லாம் மிரட்டிவிட முடியாது. நாளை முதல் பாஜக எப்படி வீறுகொண்டு எழுந்து செயலாற்றும் என தமிழக முதலமைச்சர் பார்க்கப்போகிறார். நாட்டு மக்கள் மத்தியில் அனைத்து பிரச்னைகளையும் எடுத்து வைப்போம். பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க சென்றவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.

பாஜக எழுச்சி
பாஜக அஞ்சும் கட்சியல்ல. எந்தப் பிரச்னையையும் சந்திக்கும் மாபெரும் இயக்கமாக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் திரண்டுள்ளது. இனிமேலும் பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டா, அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க பாஜக எழுச்சியோடு எழுந்து நிற்கும் என்று தெரிவித்தார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications