திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்!
நாமக்கல்: திருச்செங்கோடு தேர் திருவிழாவில், தேரில் 2 இளைஞர்கள் சிக்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய் ரூ.5 லட்சம் நிவாரணத்தையும் அறிவித்திருக்கிறார்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருவிழா இன்று சிறப்பாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இப்படி இருக்கையில், இந்த விபத்து நடந்திருக்கிறது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்தை ஒட்டி நடந்த தேரோட்டத்தின் போது, தேர் திரும்புகையில் சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கிய இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹர்ஷ்வர்தன் என்பவர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் சஷ்டிகன் (19) மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்" என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மொத்த நாமக்கல் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்நிலையில் இந்த துயர சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தையும் அறிவித்திருக்கிறார்












Click it and Unblock the Notifications