ஒரே காலேஜ்.. மாணவனை காதலித்த பேராசிரியை.. கரம்பிடித்த கையோடு காவல் நிலையத்தில் தஞ்சம்
கல்லூரி மாணவனை காதலித்து திருமணம் செய்த விரிவுரையாளர், பாதுகாப்பு கேட்டு நாமக்கல் அருகே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
நாமக்கல்: கல்லூரி மாணவனை திருமணம் செய்த விரிவுரையாளர், பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கல்லூரி மாணவர் பேராசிரியை விட நான்கு வயது இளையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு கேட்டு வந்தவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளார்கள் போலீஸ்காரர்கள்.
காதலுக்கு மொழி, ஜாதி, இனம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை என்பார்கள். அது மட்டுமா, வயதும், ஆசிரியை மாணவர் என்ற வித்தியாசமும் கூட இல்லை என்ற நிலை நாமக்கல்லில் ஏற்பட்டிருக்கிறது. காதலுக்கு ஆம் அங்கு ஆசிரியை ஒருவர் மாணவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அண்ணாதுரை மகள் மீனா,வயது 28. இவர் பரமத்திவேலூரில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக வேலை செய்து வருகிறார்.

கல்லூரியில் காதல்
இந்த நிலையில் அதே கல்லூரியில் படித்து வரும் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நல்லகுமாரன் பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் பிரவீன் (24) என்ற மாணவனுக்கும் அவருக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கல்லூரி நிர்வாகம் இருவரையும் அழைத்து பேசி எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் இரு வீட்டிலும் தெரியவந்திருக்கிறது.

திருவண்ணாமலை
இருவரது பெற்றோரும் இந்த காதலை கடுமையாக எதிர்த்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த பிரவீன் மீனா ஜோடி, கடந்த 8-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். இருவரும் திருவண்ணாமலைக்குச் சென்று கல்யாணம் செய்து கொண்டு ஊர் திரும்பி உள்ளனர்.

பேச்சுவார்த்தை
பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் பிரவீன் மீனா ஜோடி செவ்வாய்கிழமை தஞ்சம் அடைந்தனர். அதனையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டப்படி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பத்துக்கு வாழ வழி உள்ளதை போலீசார் எடுத்துக்கூறினர்.

பெற்றோர் சம்மதம்
இதன் பின்னர் மாணவன் பிரவீன் மற்றும் அவரது பெற்றோர்களுடன் கல்லூரி பேராசிரியை மீனாவை அனுப்பி வைத்திருக்கிறார்கள். மாணவனை காதலித்து கல்லூரி விரிவுரையாளர் திருமணம் செய்து கொண்டுள்ள இச்சம்பவம் தனியார் கல்லூரியிலும், நாமக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதியிலும் பேசுபொருளாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆசிரியர் மாணவர் காதல் திருமணம் என்பது பல முறை நடந்திருக்கிறது. இருவரும் மேஜர் என்றால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக யாராவது ஒருவருக்கு வயது குறைவு என்றால் கண்டிப்பாக சிறைக்கு தான் செல்ல வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications