அடிப்பதற்கு முன்பு 100 வாட்டி யோசிங்க மக்களே.. இப்படியா பண்ணுவீங்க!

திருடன் என நினைத்து இளைஞரை அடித்து கொன்றிருக்கிறார்கள் கிராம மக்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருடன் என்று நினைத்து இளைஞனை அடித்து கொன்ற பொதுமக்கள்- வீடியோ

    நாமக்கல்: யார், என்ன என்று சரிவர விசாரிக்காமல், பொதுமக்கள் என்ற போர்வையில் தனியா ஒருத்தர் வசமா சிக்கிட்டா வெளுத்து வாங்கும் கலாச்சாரத்தை நம் ஆட்கள் எப்போதுதான் விட்டு தொலைப்பார்களோ தெரியவில்லை.

    நாமக்கல் மாவட்டம் ஈகாட்டூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்பு ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் நள்ளிரவு 2 மணி அளவில் நின்று கொண்டிருந்ததை எதேச்சையாக பார்த்துவிட்டார். இதனை கவனித்த முத்துக்குமார் அந்த இளைஞரிடம், "யார், என்ன வேண்டும்? இங்க நின்னு என்ன செய்றே?" என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் திருதிருவென விழித்துள்ளார்.

    [ரூ.3 லட்சம் சொகுசு பைக்கில் டெஸ்ட் டிரைவிங்.. ஓனர் அசந்த நேரம் பைக்குடன் சர்ரென எஸ்கேப்பான இளைஞர்! ]

    மது வாடை

    மது வாடை

    மேலும் அந்த இடத்தைவிட்டு நைசாக நகர ஆரம்பித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த முத்துக்குமார், திருடன், திருடன் என கத்தி தூங்கி கொண்டிருந்த எல்லோரையும் வரவழைத்தார். ஓடிவந்த எல்லோரும் இளைஞரை விரட்டி பிடித்துவிட்டனர். அப்போது இளைஞர் தண்ணி அடித்திருந்ததால் சுற்றி நிற்பவர்களின் கேள்விகளுக்கு ஒழுங்காக பதிலை சொல்ல முடியவில்லை.

    போலீசுக்கு தகவல்

    போலீசுக்கு தகவல்

    இதனால் இளைஞர் திருடனே தான் என்று முடிவு செய்த பொதுமக்கள் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வலியை பொறுக்க முடியாமல் இளைஞர் மயங்கி விழுந்துவிட்டார். எல்லோரும் அடித்து முடித்து, இளைஞரும் மயங்கி கீழே விழுந்துவிட்ட பிறகுதான் போலீசுக்கே தகவல் சொன்னார்கள்.

    பரிதாப மரணம்

    பரிதாப மரணம்

    விரைந்து வந்த போலீசார் இளைஞரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பிறகு நடைபெற்ற விசாரணையில்தான் உண்மை நிலவரம் அடித்து உதைத்த பொதுமக்களுக்கே தெரியவந்தது. இறந்த இளைஞர் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பதும், அவர் ஒரு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    கதறி அழுத காதலி

    கதறி அழுத காதலி

    ஈகாட்டூரை சேர்ந்த ஒரு பெண்ணை உயிருக்குயிராக தர்மராஜ் விரும்பியுள்ளார். அந்த பெண்ணும் தர்மராஜ்தான் உலகம் என்றே இருந்திருக்கிறார். ஆனால் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டுக்கு தெரியவர, உடனே பெற்றோரும் அந்த பெண்ணை அடித்து உதைத்திருக்கிறார்கள். இதனால் அந்த பெண் தர்மராஜுக்கு போன் செய்து, "என்னை வீட்டில் அடிக்கிறார்கள், வலி பொறுக்க முடியவில்லை, எப்படியாவது வந்து என்னை உங்க கூட கூட்டிட்டு போயிடுங்க" என்று கதறி அழுதிருக்கிறாள்.

    வீடு தெரியவில்லை

    வீடு தெரியவில்லை

    காதலி இப்படி அழுததும் மனசு பொறுக்க முடியாத தர்மராஜ், வேலையை முடித்துவிட்டு அன்று இரவு பஸ் ஏறி ஈகாட்டூருக்கு வந்திருக்கிறார். பஸ் விட்டு இறங்கும்போதே நள்ளிரவு ஆகிவிட்டது. இதில் அந்த பெண்ணின் வீடு எங்கே என்றும் தெரிய காணோம். அதனால்தான் வீடு தெரியாமல் முத்துக்குமார் வீட்டு முன்பு போய் நின்றது.

    7 பேர் மீது விசாரணை

    7 பேர் மீது விசாரணை

    தர்மராஜை அடித்து உதைத்து கொன்ற 7 பேரை மட்டும் பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை போய் கொண்டிருக்கிறதாம். ஒருவரை அடிக்கும் உரிமை உலகில் யாருக்குமே கிடையாது. அப்படி இருக்கும்போது பொதுமக்கள் என்ற போர்வையில் ஒரு உயிரை வதைத்து கொன்ற எல்லோருமே கொலைகாரர்கள்தான்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+