நாமக்கல் பள்ளிப்பாளையம் சித்ரா சொன்ன அந்த வார்த்தை தான் காரணம்.. காதலன் பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: ஈரோட்டின் புறநகர பகுதியான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாண்டியன் என்பவரும், சித்ரா என்ற பெண்ணும் வேலை செய்து வந்துள்ளனர். இதில் பாண்டியன் கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதேபோல் சித்ரா கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். சித்ரா, பாண்டியன் இருவரும் காதலித்து வந்த நிலையில், நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்ராவின் காதலன் பாண்டியன் அளித்த வாக்குமூலத்தை இப்போது பார்ப்போம்.

திருமணத்தை மீறிய உறவு பல நேரங்களில் சிக்கலான நிலையை ஏற்படுத்திவருகிறது. திருமணத்தை மீறிய உறவுகள் குறிப்பாக குற்ற சம்பவங்களில் முடிகிறது. வெகுசிலரே அந்த எல்லைகளுக்கு போவது இல்லை. உறவில் புரிதல் இன்மை. திடீரென நடக்கும் சண்டையில் விட்டுக்கொடுத்த செல்ல ஈகோ இடம் கொடுக்காதது, தான் தான் எல்லா முடிகளையும் எடுக்க வேண்டும் என்று நினைப்பது, பெருமை பேசுவது, தன் உறவை அடிமையாக நினைப்பது, வேறுவழியில்லை என இருவருமே ஒருவரை ஒருவர் பிளாக் மெயில் செய்வது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இந்த உறவுகளில் ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் சிக்கலாம் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

Namakkal erode marriage

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த 35 வயதாகும் அருண் பாண்டியன் கூலி தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த 27 வயதாகும் சித்ரா கூலி வேலை செய்து வந்தார். இவரும் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் இருவரும் குளித்தலை பகுதியில் ஒரே இடத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

அங்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். கணவனை விவாகரத்து செய்யாமல் சித்ராவும், மனைவியை விவாகரத்து செய்யாமல் அருண் பாண்டியனும் காதலிக்க தொடங்கி உள்ளனர். இருவரும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை சந்தைப்பேட்டை பகுதியில் அவர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்திருக்கிறார்கள்.

பின்னர் இருவரும் அங்குள்ள ஒரு நூற்பாலையில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார்கள். அப்போது நூற்பாலையில் வேலை பார்த்த மற்றொரு தொழிலாளியுடன் சித்ரா நெருங்கி பழக தொடங்கினாராம். இதை அறிந்த அருண்பாண்டியன், சித்ராவை கண்டித்தாராம். இதனால் இருவருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

கடந்த மார்ச் 6ம் தேதி அன்று இரவு அருண் பாண்டியன், சித்ரா இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அருண் பாண்டியன் கத்தியை எடுத்து சித்ராவின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது சித்ரா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தகவல் அறிந்து வந்த வெப்படை போலீசார் சித்ரா உடலை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை தேடி வந்தனர். இந்நிலையில் வெப்படை அருகே உப்புபாளையம் பகுதியில் பதுங்கி இருந்த அருண் பாண்டியனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபற்றி போலீஸ் கூறிய தகவல்களை பார்ப்போம்.

பாண்டியனும், சித்ராவும் ஒரே இடத்தில் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதுவே அவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவாக மாற்றியதாம் இந்நிலையில் பள்ளிப்பாளையம் அருகே வேலை செய்யும் இடத்தில் சித்ராவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். இதனால் அவள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளாராம் சித்ரா. அதை பாண்டியன் கண்டித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதேபோல் நேற்று முன்தினமும் சித்ராவை கண்டித்தாராம்.

அப்போது சித்ரா அந்த தொழிலாளியுடன் பேசாமல் இருக்க முடியாது என்றும், என்னை கேள்வி கேட்க நீ யாா்? என்றும் ஆவேசமாக கேட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த அருண் பாண்டியன், அருகே கிடந்த வெங்காயம் வெட்டும் கத்தியை எடுத்து சித்ராவின் கழுத்தை தாக்கி கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டாராம். பின்னர் போலீசாரிடம் மாட்டிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பாண்டியனை குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி முன் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+