நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் கேட்டு போன ஸ்ரீதர்.. எமனாக மாறிய பெண்கள்.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
நாமக்கல்: நாமக்கல் பரமத்தி சாலை போதுப்பட்டியில் 'பாஸ்ட் புட்' கடை ஒன்று உள்ளது. இந்த கடையை கொங்குநகர் காலனியை சேர்ந்த ஜோதிமலர், அவரது மகள் நிஷாஸ்ரீ (23) ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் காவேட்டிப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் (55) என்பவர் அதே பகுதியில் தள்ளுவண்டி கடை வைத்து இட்லி வியாபாரம் செய்து வந்தார். ஸ்ரீதரை அந்த பெண்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? இந்த பதிவில் பார்ப்போம்.
நாமக்கல் பரமத்தி சாலை போதுப்பட்டியில் கொங்குநகர் காலனியை சேர்ந்த ஜோதிமலர் (வயது 43), அவரது மகள் நிஷாஸ்ரீ (23) ஆகியோர் பாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். நாமக்கல் காவேட்டிப்பட்டியை சேர்ந்த 55 வயதாகும் ஸ்ரீதர் என்பவர் அதே பகுதியில் தள்ளுவண்டி கடை வைத்து இட்லி வியாபாரம் நடத்தி வந்துள்ளார்.

கடந்த மே 12ம் தேதி அன்று இரவு ஸ்ரீதர் 'பாஸ்ட் புட்' கடைக்கு சென்று சிக்கன் ரைஸ் ஆர்டர் கொடுத்திருக்கிறார். அது தயார் செய்து வருவதற்குள் கடையில் இருந்த ஜோதிமலர் மற்றும் நிஷாஸ்ரீ ஆகியோருக்கும், ஸ்ரீதருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது இருவரும் ஸ்ரீதரை தாக்க தொடங்கினார்களாம்.
இதற்கிடையில் இது குறித்து நிஷாஸ்ரீ, தமிழர் தேசம் கட்சியின் நாமக்கல் அவை தலைவரான தனது கணவர் மவுலீஸ்குமாருக்கு (25) செல்போனில் தகவல் கொடுத்தாராம். மேலும் அப்போது சம்பவ இடத்துக்கு மவுலீஸ்குமார் தனது நண்பர் பிலிக்ஸ் (25) என்பவரை அழைத்து வந்தாராம். அப்போது கடை முன்பு நின்று கொண்டு இருந்த ஸ்ரீதரை உருட்டு கட்டை மற்றும் சிக்கன் ரைஸ் செய்ய பயன்படுத்தப்படும் கரண்டி ஆகியவற்றை கொண்டு கடுமையாக தாக்கி உள்ளார்களாம்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த ஸ்ரீதரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீதரின் மனைவி பூமதி (45) நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்கள். அதில், இந்த கொலை சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொழில் போட்டியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஸ்ரீதரை அவர்கள் காலி செய்தது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதையடுத்து ஜோதிமலர், நிஷாஸ்ரீ, மவுலீஸ்குமார், பிலிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் கொல்லிமலை தின்னனூர் நாட்டை சேர்ந்த அரவிந்த் (22) என்பவர், குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைதானார். இதேபோல் நாமக்கல் மதுரைவீரன் புதூரை சேர்ந்த கோபிநாத் (30) என்பவர் குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தப்பிக்க உதவியதாகவும் கைதாகி உள்ளனர். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications