தி கோட் திரைப்படம் பார்க்க.. நாமக்கல் அருகே ஆசையோடு சென்ற நண்பர்கள்.. எதிரே வந்த எமன்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குணசேகரன் மற்றும் அழகர் ஆகிய இரண்டு இளைஞர்கள் 'கோட்' திரைப்படம் பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர், எதிரே விறகு ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வேன், வளைவில் திரும்பிய போது திடீரென மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த குணசேகரன் மற்றும் அழகர் ஆகிய இரண்டு இளைஞர்களும் நிகழ்விடத்திலேயே இறந்து போனார்கள்.
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது.. இந்த படம் வெளியானது முதலே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவருகிறார்கள். பலரும் படம் பார்க்க ஆர்வம் காட்டினார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்கள் கடந்த ஒரு வாரமாக ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் பலர் இந்த படத்தை பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

அப்படித்தான் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோர்பாளையம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாது என்பவரின் மகன் அழகர் (23). மோர்பாளையம் தோப்பங்காடு நகரை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் குணசேகரன் (22). ஆகிய இருவரும் விஜய்யின் தி கோட் திரைப்படம் பார்க்க ஆர்வமுடன் இருந்தார்கள். நண்பர்களான அழகரும், குணசேகரனும் திருச்செங்கோட்டில் உள்ள பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார்கள்.
இவர்கள் இருவரும் நடிகர் விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் பார்க்க மோர்பாளையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 9ம் தேதி மோட்டார் சைக்கிளில் மல்லசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பொன்னி ஆத்துபாலம் அருகே வளைவான பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது வடுகப்பாளையத்தில் இருந்து விறகு பாரம் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று எதிரே உள்ள வளைவில் திடீரென திரும்பியது.
அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் அழகர், குணசேகரன் ஆகிய இருவரும் படுகாயம் காயமடைந்தனா். அதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அழகர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குணசேகரனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரும் செல்லும் வழியிலேயே இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி திருச்செங்கோடு மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேன் டிரைவர் வீராசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த அழகர், குணசேகரன் இருவரின் உடல்களும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.'கோட்' திரைப்படம் பார்க்க சென்றபோது சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர்கள் 2 பேர் பலியான சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications