நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு பள்ளி கழிவறையில் மாணவர் இருந்த கோலம்.. அதிர்ந்த உறவினர்கள்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பெயிண்டிங் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மகன் கவின்ராஜ்க்கு 14 வயது ஆகிறது. கவின்ராஜ் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கழிப்பறையில் மாணவர் கவின்ராஜ் இருந்த கோலத்தை கண்டு சக மாணவர்கள் ஆடிப்போனார்கள்.. என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பெயிண்டிங் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மகன் கவின்ராஜ்க்கு 14 வயது ஆகிறது. கவின்ராஜ் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் புதன்கிழமை அன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றிருக்கிறார். பள்ளி இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்ற கவின்ராஜ் அங்கு மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.

தகவல் அறிந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் கவின்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். இத்தகவல் அறிந்து மருத்துவமனை முன்பு திரண்ட மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவின்ராஜ் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவர் உயிரிழப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். போலீசாரின் உறுதியை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, புதன்கிழமை மாலையில் மீண்டும் ராசிபுரம் - நாமக்கல் சாலையில் எல்ஐசி அலுவலகம் முன்பு கவின்ராஜின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களைச் சமாதானம் செய்து, மறியலை கைவிட செய்தனர். தொடர்ந்து பதற்றமான சூழலுக்கு நடுவில், மாணவர் கவின்ராஜ் உயிரிழப்பு தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்களிடம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக ராசிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் ராசிபுரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications