குட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்
இளம்பெண்ணை கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்
Recommended Video
நாமக்கல்: குட்டையில் சடலமாக மிதந்து கிடந்தார் ஷோபனா.. சிதறி கிடந்த சாக்லேட்டுகளும், துணிகளும் அவரது கொலையின் கொடூரத்தை உணர்த்திவிட்டது!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி செந்தில் - ஷோபனா. இவர்களுக்கு 11 வயதில் தேவா, 4 வயதில் சச்சின் என்ற மகன்கள் உள்ளனர். ஷோபனாவுக்கு 29 வயதாகிறது.. திருச்செங்கோட்டில் ஒரு பியூட்டி பார்லரில் வேலைபார்த்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவாவுக்கு பிறந்த நாள். அதனால் புது துணி வாங்க வெளியே சென்ற ஷோபனாவை காணவில்லை. இரவு 9 மணிக்கு திடீரென கணவருக்கு ஷோபனா போன் செய்து, கடைசி பஸ்ஸை விட்டுட்டேன்.. அதனால ஃபிரண்ட் கூட காரில் வந்து வீட்டில் இறங்கிடுறேன்" என்று சொன்னார்.
ஆனால் நடுராத்திரி ஆகியும் ஷோபனா வீட்டுக்கு வரவில்லை. அதனால் பதறி போன கணவர் உடனே இதுகுறித்து மொளசி போலீஸில் புகார் தந்தார். இதையடுத்து ஷோபனா போலீசார் தேடி வந்த நிலையில், அவரது சடலம் புள்ளியம்பாளையம் ரோட்டோரம் கிடந்த ஒரு குட்டையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த குட்டைக்கு பக்கத்தில் ஒரு தோட்டம் உள்ளது. அங்கு ஷோபனா தன் மகனுக்காக வாங்கிய புது துணி, பர்த்டே சாக்லேட்டுகள் சிதறி கிடந்தன. இதையடுத்து ஷோபனா உடம்பில் நகைகள் அப்படியே இருந்தன.. அதனால், நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்காது என்ற முடிவுக்கு வந்த போலீசார், பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.
இதையடுத்து அவரது செல்போனை ஆராய்ந்தபோது, ஷோபனாவின் கள்ள உறவு தெரியவந்தது. கடைசியாக திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞருடன் பேசியதால், போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் தகாத உறவால் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. கள்ளக்காதலன் எதற்காக ஷோபனாவை கொலை செய்தான் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications