"சித்தாள் சரோஜா" தான் வேணும்.. அடம் பிடித்த மேஸ்திரி.. பெட்ரோல் ஊற்றி எரித்தே கொன்ற மனைவி!
கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுள்ளார் மனைவி
நாமக்கல்: "எல்லாமே சரோஜாதான்.. வாழ்ந்தால் சரோஜா கூடத்தான்" என்று பிடிவாதமாக இருந்தார் கந்தசாமி.. இதனால் ஆத்திரமடைந்த மனைவி அங்கம்மாள், நடுராத்திரி கந்தசாமி தூங்கும்போது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்றுவிட்டார்!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி.. 45 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட மேஸ்திரி... இவருடைய மனைவி அங்கம்மாள்.. அவருக்கு 40 வயதாகிறது.. இவர்களுக்கு சாந்தி என்ற 20 வயதில் மகள் இருக்கிறார்.
நேற்று விடிகாலை அங்கம்மாள், சாந்தியை அழைத்து கொண்டு அதே பகுதியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.. பிறகு கந்தசாமி மட்டும் வீட்டின் வெளியே தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

பொதுமக்கள்
சிறிது நேரத்தில் கந்தசாமி அலறும் சத்தம் கேட்டது.. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஓடிவந்தனர்.,. அப்போது கந்தசாமி உடம்பெல்லாம் தீப்பிடித்து மீது எரிந்து கொண்டிருந்தார்.. வலியால் அவர் கதறியதும், பொதுமக்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கந்தசாமி இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கந்தசாமியின் மனைவி அங்கம்மாள், மகள் சாந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

வாக்குமூலம்
போலீசாரின் முதல்கட்ட விசாரணையிலேயே பல அதிர்ச்சிகளை தாயும் - மகளும் தெரிவித்தனர்.. வாக்குமூலத்தில் அவர்கள் சொன்னதாவது: என் கணவர் கட்டிட மேஸ்திரி... அவருக்கும் வேலை செய்யும் இடத்தில் சித்தாள் சரோஜா என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.. சரோஜா சேலத்தை சேர்ந்தவர்.. இவர்களின் உறவை கைவிடுமாறு நான் பலமுறை சொன்னேன்.. ஆனால் இருவரும் கேட்கவில்லை.

சரோஜா
ஒரு கட்டத்தில் வாழ்ந்தால் சரோஜாவுடன்தான் வாழ்வேன் என்று பிடிவாதம் பிடித்தார்... அதனால் சொத்தையும் எங்களிடம் பிரித்து கொடுக்கும்படி தொந்தரவு செய்து வந்தார். இந்த கள்ள காதலால் எங்களது குடும்பம் பாழாகிவிடும் என்பதால்தான் நானும், என் அம்மா, மகளு 3 பேரும் அவரை கொலை செய்ய திட்டம் செய்தோம்.. வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றோம்." என்றனர்.

பைக்குகள்
இதையடுத்து அங்கம்மாள், அவரது மகள், அம்மா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கணவனை எரித்தும் ஆத்திரம் தீராத அங்கம்மாள் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 2 பைக்குகளுக்கும் மிச்சமிருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். அதில் 2 பைக்குகளுமே எரிந்து கருகிவிட்டன.. சரோஜாவுடன் உறவு வைத்ததால், 3 பெண்களும் சேர்ந்த மேஸ்திரியை கொன் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications