திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம்..இன்று பெரிய சேஷ வாகனம்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கியுள்ளது. முதல் வாகன புறப்பாடாக ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரம்மோற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நேற்று மாலை திருப்பதி மலையில் நடைபெற்றது.

அங்குரார்ப்பணத்தை முன்னிட்டு ஏழுமலையானின் சேனை முதல்வன், கோயிலில் இருந்து புறப்பட்டு மேற்கு மாட வீதியில் உள்ள வசந்த மண்டபத்தை அடைந்தார். அங்கு புற்றுமண் சேகரிக்கப்பட்ட நிலையில் சேனை முதல்வனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து புற்றுமண் கலசங்கள் மாடவீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தன.
கோவிலில் உள்ள மண்டபத்தில் புற்று மண்ணை கொட்டி அதில் பூமாதேவி படத்தை கோவில் அர்சகர்கள் வரைந்தன . தொடர்ந்து பூமாதேவி படத்தின் வயிற்று பாகத்தில் இருந்து மண்ணை எடுத்து புதிய மண் கலசங்களில் போட்டு அவற்றில் நவதானியங்கள் தூவப்பட்டன.
அங்குரார்ப்பணத்தின் போது தூவப்பட்ட நவதானியங்கள் எந்த அளவிற்கு முளைக்கிறதோ அந்த அளவிற்கு நாட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகம். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை முதல் வாகன புறப்பாடாக ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் நடைபெற உள்ளது.
புராண இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம். பிரம்மோற்சவ நாட்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார். அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'மணவாளப் பெருமாள்' என்னும் சிலையைத் திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான், போக சீனிவாசமூர்த்தி என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றது. இன்றைய தினம் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கியுள்ளது. சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் ஆதிசேஷன் மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு 7 தலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் அருள்பாலிக்கிறார். நாளை காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளுகிறார். 2வது நாளான நாளை காலையில் 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சேஷ வாகனம் என்பது 'தாஸானு தாஸ' பக்திக்கு எடுத்துக்காட்டு. இதில் சுவாமி எழுந்தருளி உலா வரும்போது தரிசனம் செய்தால், நம் மனதில் இருக்கும் மிருகத்தன்மை நீங்கி சாத்விகமான குணங்கள் ஏற்பட்டும். மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கை அமையும். சேஷ வாகனத்தில் சுவாமி உலா வரும்போது, தரிசனம் செய்பவர்களுக்குக் குண்டலினி யோக பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பூலோக வைகுண்டமாக திருமலை காட்சி அளிக்கிறது. பல டன் மலர்களால் கோவில் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications