சரசரவென சரிந்த வீடுகள், மண்ணில் புதைந்த மக்கள்.. நிலச்சரிவில் 77 பேர் பலி, பலர் மாயம்.. நேபாள துயரம்
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 77 பேர் பலியாகி உள்ளனர்
காத்மண்டு: நேபாளத்தின் கிழக்கு மலை பிரதேசங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது... இதனால், அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது... வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதையடுத்து மீட்பு பணிகள் துரிதமாகி உள்ளன.
நேபாளத்தை பொறுத்தவரை, வழக்கமாக ஜுன் முதல் செப்டம்பர் வரை பருவமழை பெய்யும்.. ஆனால், இந்த முறை அக்டோபர் மாதத்திலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது..
அந்த நாட்டில் பெரும்பாலான மலைப்பாங்கு பகுதிகள் உள்ளன.. அதனால், பலத்த மழை பொழிவு ஏற்படும் காலங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களும் ஏற்படுவது இயல்பான ஒன்று.. இப்படிப்பட்ட இயற்கை சீற்றங்களினால், ஒவ்வொரு வருடமும் உயிரிழப்பும் அதிகம் ஏற்படுவதும் வழக்கம்.

கனமழை
அப்படித்தான் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே கனமழை பொழிந்து கொண்டே இருக்கிறது.. இதனால், திடீர் வெள்ளம் காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஏராளமானோர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.. கிழக்கு மலை பிரதேசங்களில் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்துபோனதால், மீட்பு பணிகள் மழையால் தாமதமாகி உள்ளன.

77 பேர் உயிரிழப்பு
நேற்று முதல்கட்டமாக 40 பேர் பலியானார்கள் என்று தகவல் வந்தது.. அத்துடன் 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை, தேடி கொண்டிருப்பதாக செய்தி வந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன... மேலும் படுகாயம் அடைந்த 22-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்..

26 பேர் மாயம்
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்... ஆனால், இன்னும் 26 பேரை காணவில்லையாம்.. மாயமான அவர்களை தேடும் பணி நடக்கிறது.. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக, கிராமங்களுக்கு இடையிலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.. அதேபோல மின்சாரம் உட்பட பல்வேறு தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.. ஆயிரக்கணக்கான வீடுகளும், பாலங்களும், சாலைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
Recommended Video

விவசாயிகள் கண்ணீர்
மீட்பு குழுவினர் மிக தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.. இதனிடையே, அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், கிழக்கு பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் காத்மாண்டு வானிலை ஆராய்ச்சி மையம் தற்போது அறிவித்துள்ளது... அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயுள்ள நிலையில், பலத்த மழையால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்களும் நீரில் மூழ்கி உள்ளது, விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications