சின்ன வயசுல இப்படி ஒரு திறமையா! புதிய விண்கல்லை கண்டுபிடித்து அசத்திய இந்திய மாணவன்
நியூயார்க்: டெல்லி நொய்டாவை சேர்ந்த 14 வயது மாணவன் தக்ஷ் மாலிக், விண்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மாணவனின் சாதனை பார்த்து வியந்த நாசா இதனை அங்கீகரித்துள்ளது.
நமது பூமி இருக்கும் சூரிய குடும்பத்தில் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன. நட்சத்திரங்கள், கோள்கள், துணை கோள்கள், விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் என பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தான ஒன்று எனில் அது விண்கற்கள்தான். இது எப்போது, எப்படி, எங்கிருந்து பூமியை தாக்கும் என்றே சொல்ல முடியாது. எனவே இந்த விண்கற்களை ஆய்வாளர்கள் தேடி தேடி கண்டுபிடித்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில்தான் நொய்டாவை சேர்ந்த மாணவர் தக்ஷ் மாலிக் விண்கல் ஒன்றை புதியதாக கண்டுபிடித்திருக்கிறார். இதற்கு முன்னர் 5 இந்திய மாணவர்கள் இதே போல விண்கற்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் 6வது மாணவராக தக்ஷ் மாலிக் இருக்கிறார். இந்த விண்கல் குறித்த நாசா 4-5 ஆண்டுகள் வரை ஆய்வு செய்யும். அதன் பின்னர் தக்ஷ் மாலிக் எந்த பெயரை விரும்புகிறாரோ அதை வைக்கலாம். தற்காலிமாக இதற்கு 2023 OG40 என பெயரிடப்பட்டிருக்கிறது.
இது குறித்து அம்மாணவர் கூறுகையில், "நான் இந்த விண்கல்லை கண்டுபிடித்தபோது, நாசாவில் பணியாற்றுவதை போல உணர்ந்தேன். இப்போதைக்கு எந்த பெயரையும் வைக்கவில்லை. Destroyer of the World' அல்லது 'Countdown' என பெயர் வைக்கலாமா என யோசனையில் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
டெலஸ்கோப்பை எடுத்து வானத்தை பார்த்தவுடன் இந்த கல் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை கண்டுபிடித்தது அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் அல்ல. மாறாக தக்ஷ் மாலிக் தனது நண்பருடன் சேர்ந்து சுமார் 18 மாதங்களாக விண்கல்லுக்கான தேடுதலை நடத்தியுள்ளனர். அவர்களது பள்ளியில் 'வானியல் கிளப்' இயங்கி வந்திருக்கிறது. இதில் உறுப்பினர்களான தக்ஷ் மாலிக் இந்த கல்லை தேடியிருக்கிறார். இவரது தேடலுக்கு நாசா உதவியிருக்கிறது. அதாவது பள்ளியின் சார்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நாசா சில உதவிகளை செய்திருக்கிறது.
தக்ஷ் மாலிக் மற்றும் அவரது நண்பர், என இருவரும் நாசாவின் டேட்டாக்களை சரிபார்த்து அதன் பின்னர் தேடுதலில் இறங்கியுள்ளனர். அதாவது எது, எது எங்கே இருக்கிறது என்கிற ஸ்பேஸ் மேப் நாசாவிடம் இருக்கிறது. இதை படித்து புரிந்துக்கொண்டு பின்னர் அவர்கள் தேடுதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களின் முயற்சி தொடர்ச்சியாகவும், சரியானதாகவும் இருந்திருக்கிறது. எனவேதான் விண்கல்லை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.
வழக்கமாக நட்சத்திரங்களும், கோள்களும், துணைக்கோள்களும்தான் வெளிச்சமாக தெரியும். ஆனால் விண்கற்கள் அவ்வளவு பிரகாசமாக இருக்காது. எனவே கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம் என்று சொல்லலாம். ஆனால் முடியும். ஒரு நட்சத்திரத்திற்கு முன்னால் விண்கல் கிராஸ் ஆகிறது எனில், நட்சத்திரத்தின் ஒளி, திடீரென மறைந்து மீண்டும் தெரிய வரும். இதை வைத்து அங்கு விண்கல் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications