விமானத்தின் சைஸ் கொண்ட விண்கல்லால் பூமிக்கு காத்திருக்கும் பேராபத்து! நாசா வர்னிங்
நியூயார்க்: 2025 DU2 என பெயரிடப்பட்டிருக்கும் விண்கல் ஒன்று இன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாகவும், இதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட அது பூமிக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் நாசா எச்சரித்துள்ளது.
விண்கற்களால் பூமி அழிய கூட வாய்ப்ப இருக்கிறது. ஆனால் இப்போது வரை அப்படியான ஆபத்துக்களை மனித குலம் சந்தித்தது கிடையாது. இருப்பினும் இந்த விஷயத்தில் நாம் உஷாராக இருக்க வேண்டியது முக்கியம்.

சுமார் 150 அடி அகலம், ஒரு பெரிய விமனாத்தின் சைஸ் கொண்ட விண்கல் இன்று பூமியை 5.4 லட்சம் கி.மீ தொலைவில் நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதை நாசா கண்டுபிடித்திருக்கிறது. 5 லட்சம் கி.மீ தொலைவு நெருக்கமான தூரமா? என்று நீங்கள் கேட்கலாம். விஞ்ஞானிகளை பொறுத்தவரை 75 லட்சம் கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ளவைதான் பாதுகாப்பான தூரம். எனவே இந்த விண்கல் பூமிக்கு நெருக்கமான விண்கல்லாக அடையாளப்படுத்தப்படுகிறது.
விண்வெளி நாம் நினைப்பதை விட பெரியது. பக்கத்திலிருக்கும் செவ்வாய் கிரகம் சுமார் 2 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. உண்மையில் கிரகங்கள் பக்கத்தில் இல்லை. செவ்வாய் கிரகத்துடன் இந்த விண்கல்லை ஒப்பிடும்போது, அது கடந்து செல்லும் தூரம் ரொம்ப குறைவுதான். ஒருவேளை இந்த விண்கல் பூமியின் மீது மோதினால் பேரழிவு ஏற்படும்.
கல் பூமியில் விழும் இடத்தில் பெரும் வெடிப்பு ஏற்படும். ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணு குண்டு ஏற்படுத்திய வெப்பத்தை விட 600 மடங்கு அதிக வெப்பத்தை இந்த கல் ஏற்படுத்தும். 10-20 கி.மீ விட்டம் கொண்ட பள்ளம் உருவாகும். 100-200 கிமீ சுற்றளவு பகுதிகளில் உள்ள அனைத்தும் அழிக்கப்படும். சிறிய அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படும். நகரங்களில் இந்த கல் விழுந்தால் குறைந்தது 1-10 லட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள். இதுவே கடலில் விழுந்தால், பல கி.மீ உயரத்திற்கு சுனாமி அலைகள் உருவாகி கடலோர நகரங்களை அப்படியே அழித்துவிடும்.
ஒரு காலத்தில் இப்படி விண்கல் மோதிதான் பூமியிலிருந்து டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்து போயின. ஆனால் அந்த விண்கல் 1 கி.மீ அளவுக்கு விட்டம் கொண்டிருந்தது. அது மோதிய உடனே எரிமலைகள் வெடிக்க தொடங்கின. எரிமலை வெடிப்பு காரணமாக பூமி முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் சூரிய ஒளி பூமிக்குள் வராமல் போனது.
ஒருபுறம் புகை, டைனோசர்களின் சுவாசத்தை கடுமையாக பாதித்தது. மறுபுறம் சூரிய ஒளி இல்லாததால் ஒளி சேர்க்கை செய்ய முடியாமல் தாவரங்கள் உயிரிழந்தன. அதை நம்பியிருந்த உயிர்கள் அடுத்தடுத்து மரணிக்க, டைனோசர்கள் உணவு இல்லாமல் கொத்து கொத்தாக செத்து மடிந்தது. ஆனால் அந்த அளவுக்கான பேரழிவு இப்போது ஏற்பட வாய்ப்பு இல்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications