ஐஸ்கிரீமை திருடி அம்மா தின்னுட்டாங்க.. போலீசிடம் போட்டு கொடுத்த 4 வயது சிறுவன்.. இறுதியில் ட்விஸ்ட்
நியூயார்க்: ‛‛உடனே எங்க வீட்டுக்கு வாங்க.. எங்க அம்மா மிகவும் மோசமாக நடந்து கொள்கிறோர். அவரை பிடித்து செல்லுங்கள்'' என்று போலீசுக்கு போன் போட்டு அமெரிக்காவின் 4 வயது சிறுவன் புகாரளித்ததும், அதன்பிறகு நடந்த சுவாரசிய சம்பவம் பற்றிய விவரமும் வருமாறு:
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் மவுண்ட் பிளசண்ட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி விஸ்கான்சின் எனும் இடம் உள்ளது. இங்கு 4 வயது சிறுவன் வசித்து வருகிறான். கடந்த 4ம் தேதி அந்த சிறுவன் தனது வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு போன் செய்தான்.

போலீசாரின் அவசர உதவி எண்ணான 911 டயல் செய்து பேசிய சிறுவன், ‛‛உடனே எங்கள் வீட்டுக்கு வாங்க.. எங்க அம்மா மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார். அவரை பிடித்து கொண்டு செல்லுங்கள்'' என்று கூறினார்.
இதை கேட்டதும் 2 பெண் போலீஸ் உடனடியாக சிறுவனின் வீட்டு முகவரிக்கு சென்றனர். அப்போது அங்கு 4 வயது சிறுவன் மற்றும் அவரது அம்மா இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், வீட்டில் சிறுவனுக்காக ஐஸ்கிரீம் வாங்கி வைத்துள்ளனர். சிறுவன் அதனை சாப்பிட்டுள்ளான். மேலும் அதில் ஒரு ஐஸ்கிரீமை எடுத்து அவரது அம்மாவும் சாப்பிட்டுள்ளார். இதில் கோபமான சிறுவன் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து புகார் அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து பெண் போலீஸ் சிறுவனை அழைத்து சமாதானம் செய்தனர். அதன்பிறகு அவனுக்கு போலீஸ் சார்பில் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கப்பட்டது. இதுபற்றி அமெரிக்காவின் மவுண்ட் பிளசண்ட் போலீஸ் துறை சார்பில் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛கடந்த 4ம் தேதி எங்களுக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய நபர் அம்மா மீது புகார் அளித்தார். அம்மா மோசமாக நடந்து கொள்கிறார். அவரை பிடித்து செல்லுங்கள் என்று கூறினான்.
சிறுவன் போனில் பேசியதை பார்த்ததும் அவரது அம்மா வாங்கி பேசினார். அம்மா கூறும்போது, ‛‛நான் எனது மகனின் ஐஸ்கிரீமை எடுத்து தின்றுவிட்டேன். இதனால் தான் புகார் அளிக்க 911 என்ற எண்ணை அழைத்துள்ளான்'' என்று கூறினார். நாங்கள் வீட்டு முகவரியை கேட்டு கொண்டோம். வீட்டில் ஐஸ்கிரீம் சார்ந்த பிரச்சனை தான் உள்ளதா? இல்லாவிட்டால் வேறு பிரச்சனை இருக்கிறதா? என்பதை அறிய வீட்டுக்கு சென்றோம்.
அப்போது உண்மையில் ஐஸ்கிரீம் பிரச்சனை தான் இருந்தது. சிறுவனின் ஐஸ்கிரீமை அவரது அம்மா சாப்பிட்டதால் தான் எங்களுக்கு புகார் வந்திருப்பது உறுதியானது. அம்மாவை சிறையில் அடைக்க வேண்டுமா? என்று கேட்டபோது சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதோடு அவனின் பிரச்சனை என்பது கூடுதலாக சில ஐஸ்கிரீம்கள் வேண்டும் என்பது தான். இதனால் 2 நாட்களுக்கு பிறகு நாங்கள் மீண்டும் அந்த வீட்டுக்கு சென்று சிறுவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பதிவில் சிறுவனுடன், பெண் போலீஸ் 2 பேர் இருப்பதும், சிறுவன் கையில் ஐஸ்கிரீம் இருக்கும் போட்டோவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்ட் இப்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications