நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிள்.. நெதர்லாந்தில் மீட்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவிற்கு சொந்தமான 400 ஆண்டுகள் பழமையான பைபிள் நெதர்லாந்தில் மீட்கப்பட்டது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில், கார்னிஜே எனும் நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில், பழங்கால பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

400 years old american bible recovered

இந்த நூலகத்தில் பணியாற்றிய ஒருவர், அவரது நண்பருடன் சேர்ந்து, சுமார் ரூ.57 கோடி மதிப்பிலான பொக்கிஷப்பொருட்களை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் நடந்தது கடந்த 1990 ம் ஆண்டு. இந்த சம்பவத்தின் போது 400 ஆண்டுகள் பழமையான அமெரிக்க பைபிள் ஒன்றும் திருடப்பட்டது.

மூக்கில் தண்ணீரை உறிஞ்சி கண்ணில் வெளியே தள்ளும் குங்பூ மாஸ்டர்.. வைரலாகும் வீடியோ!மூக்கில் தண்ணீரை உறிஞ்சி கண்ணில் வெளியே தள்ளும் குங்பூ மாஸ்டர்.. வைரலாகும் வீடியோ!

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீசார் வழக்கு பதிந்து, திருடப்பட்ட பொக்கிஷங்களை தேடினர். ஆனால் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு இந்த வழக்கை அந்நாட்டின் மத்திய புலனாய்வு போலீசார் கையில் எடுத்தனர். இதையடுத்து வழக்கு துரிதப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இரண்டாண்டுகள் கழித்து, கார்னிஜே நூலகத்தில் இருந்து காணாமல் போன அந்த பழமையான பைபிள் நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் ரூ.9 லட்சம் பணம் கொடுத்து அந்த பைபிளை போலீசார் மீட்டனர். அந்த பைளில் கார்னிஜே நூலகத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

English summary
The American police have recovered 400 hundred years old bible from Netherland museum, which was stolen from Karnije museum in Pensilvenia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X