"டாப் லெஸ்" பார்ட்டி.. போலீசுடன் சேர்ந்து ஸ்டேஷனிலேயே "உல்லாசம்".. ஆபாசம்.. ச்சீ என்ன கொடுமை இது?
நியூயார்க்: அமெரிக்காவில் பெண் காவலர் ஒருவர் 6 ஆண் காவலர்களுடன் திருமணத்திற்கு மீறிய உறவை வைத்திருந்த குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 7 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டென்னசி காவல் நிலையத்தில் பெண் காவல் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. இந்நிலையில் காவல் நிலையத்தில் உள்ள இதர காவலர்களோடு இவர் தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்த நிலையில், இது குறித்து ஏற்கெனவே பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது.
ஸ்டேஷனில் பணியாற்றும் 5 காவலர்களுடன் சேர்ந்து தனியாக பார்ட்டி நடத்துவது, அதில் ஆபாச நடனம் ஆடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்கின்றன. இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகரித்திருக்கிறது. மட்டுமல்லாது காவல்நிலையம் முழுவதும் இது குறித்து மட்டுமே பேச்சு இருந்திருக்கிறது. சில காவலர்கள் இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்திருக்கிறார்கள்.

புகார்
இத்தனை நாட்கள் எச்சரித்து வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த புகாரை தொடர்ந்து அதிரடியாக விசாரணையில் இறங்கினர். விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 28ம் தேதி முதல் நடைபெற்று வந்த விசாரணையில் காவல்துறைக்கு சொந்தமான ஜிம்மில் இப்பெண் காவலர் இரண்டு காவலர்களுடன் நெருக்கமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல அந்த தினத்திலேயே காவல் நிலையத்திற்குள்ளும் இப்பெண்காவலருடன் வேறு இரண்டு காவலர்கள் நெருக்கமாக இருந்திருக்கின்றனர். சரி இவ்வளவுதானா என்று பார்த்தால் கிடையாது.

விசாரணை
இப்பெண்காவலர் சில அதிகாரிகளின் வீட்டிலும், படகுகளிலும் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்தது தெரிய வந்துள்ளது. பெண் காவலரை இது தொடர்பாக விசாரித்த நிலையில் இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆண் காவலரிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில் ஆண் காவலர்கள் சிலர் தொடக்கத்தில் இது குறித்து மறுத்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவத்தை வாக்குமூலமாக பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள், இதில் வேறு யாரேனும் ஈடுபட்டிருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரிக்க தொடங்கினர்.

செல்போன்
இந்த விவகாரம் காரணமாக பெண் காவலரின் கணவர் அவருடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகவும், விவாகரத்து கோருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது இந்த பிரச்னையின் தீவிரத்தை அதிகரித்தது. முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட காவவர்கள் விசாரணை முடியும் வரை தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன் பின்னர் பெண் காவல்துறை அதிகாரியின் செல்போனை பறிமுதல் செய்த உயர் அதிகாரிகள், அதில் வந்த மெஸேஜ்களை சோதனை செய்திருக்கின்றனர். இதில், மேலும் பல காவலர்கள் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல காவலர்கள் இப்பெண்காவலருக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளனர்.

பணி நீக்கம்
பின்னர் ஏற்கெனவே தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த 5 பேருடன் மேலும் இரண்டு பேரும் இவ்வாறு இடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் விசாரணை முடிவில் காவல் நிலையத்தில் ஆபாசமான செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காகவும், பெண் காவலருடன் ஒரே நேரத்தில் பலபேர் உடலுறவு கொண்டதன் காரணமாகவும் சம்பந்தப்பட்ட பெண் காவலர் உட்பட 8பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் இப்பெண் காவலரின் சம்மதத்துடன் நடைபெற்றுள்ளதால் இந்த முடிவை காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஒழுக்கம்
கடந்த 2021ம் ஆண்டிலிருந்து பெண் காவல் அதிகாரி காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு இப்பணியில் சேர்ந்த பின்னர் அதிகமாக குடி பழக்கம் உருவாகியிருக்கிறது. மேலும், அத்துடன் சில போதை பழக்கங்களும் தொற்றிக்கொண்டுள்ளன. இதுதான் இப்பெண் காவல் அதிகாரி இப்படி மாறுவதற்கு காரணம் என்று காவல்துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன. மேலும், "அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண் பெண்ணின் பாலியல் விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகள் அவர்களது தனிப்பட்ட உரிமை. ஆனால் காவல்துறை அதிகாரியாக பணியாற்றும்போது பணி நேரங்களில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்" என்று காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்!












Click it and Unblock the Notifications