"மாமியாரை" கூட விடலயே.. பொத்தல் பொத்தலா போன உடல்கள்.. மெத்தையிலேயே சரிந்த 7 பேர்.. 8வது நபரும் காலி
அமெரிக்காவில் 7 பேரை சுட்டுக்கொன்ற நபர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்
நியூயார்க்: ஒரே நிமிஷம் ஆத்திரப்பட்டதால், ஒரு குடும்பமே சிதைந்து போன சோகம் அமெரிக்காவில் நடந்துள்ளது.. பிஞ்சு குழந்தைகளின் முகத்தை கண்டு கதறுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.
அமெரிக்காவில் உதா மாகாணம் சால்ட் வேல் சிட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் மிக்கேல்.. எனோக் என்ற இடத்தில் வசித்து வருகிறார் மிக்கேல்.. 42 வயதாகிறது..
மனைவி பெயர் தவுஷா.. இவர்களுக்கு 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.. இவர்களுடன் தவுஷாவின் அம்மா, அதாவது மிக்கேலின் மாமியார், கெயில் ஏரால் என்பவரும் இவர்களுடனேயே தங்கி வந்துள்ளார்..

மாமியார்
எல்லாருமே ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், தம்பதி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.. அடிக்கடி தகராறும் வந்துள்ளது.. எனவே, கணவரை பிரிந்து விடலாம் என்று தவுஷா முடிவெடுத்துள்ளார்.. இதற்காக 2 வாரங்களுக்கு முன்பு, தவுஷா டைவர்ஸ் கேட்டு, கோர்ட்டில் அப்ளை செய்துள்ளார்.. ஆனால், இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று வேறு யாருக்குமே தெரியவில்லை.. டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போன விஷயத்தை கேள்விப்பட்டதும், மிக்கேலுக்கு கோபமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

உச்சக்கட்டம்
அதனால், மனைவியை சமாதானம் செய்ய முயன்றார்.. எவ்வளவோ சமாதானம் செய்தும், தவுஷா தன் முடிவில் மாறவே இல்லை.. இதனால் மிக்கேலின் கோபம் அதிகமானது.. உயிரோடு இருந்தால்தானே டைவர்ஸ் வாங்க முடியும்? அதனால் எல்லாரையும் கொலை செய்துவிடலாம் என்று முடிவெடுத்தார். மனைவி மீதுள்ள ஆத்திரத்தில், ஒட்டுமொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டு பொசுக்கிவிட்டார்.. சம்பவத்தன்று இரவு வீட்டில் எல்லாரும் தூங்கி கொண்டு இருந்திருக்கிறார்கள்..

கட்டிலில் சரிந்தனர்
அப்போது, துப்பாக்கியை எடுத்த மிக்கேல், மனைவி, குழந்தைகள் என்றெல்லாம் பார்க்காமல், சடசடவென சுட்டு தள்ளிவிட்டார்.. மாமியாரையும் விட்டுவைக்கவில்லை.. 7 பேருமே குண்டு பாய்ந்து கட்டிலிலேயே இறந்துபோனார்கள்.. எல்லாருடைய சடலத்தையும் உற்றுபார்த்த மிக்கேல், இவர்களே போய்விட்டார்கள், தான் மட்டும் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் என்று நினைத்து, அதே துப்பாக்கியால் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்... கடைசியில் போலீசார் விரைந்து வந்து, சடலங்களை மீட்டனர்.. விசாரணையும் ஆரம்பித்தனர்.. அக்கம் பக்கத்தில் இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்..

பொத்தல் சடலங்கள்
மிக்கேல் குழந்தைகள், அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுடன் தான் தினமும் விளையாடுவார்களாம்.. அந்த 5 குழந்தைகளும், 4 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள்.. மிக்கேலின் மொத்த குடும்பமும், அந்த பகுதி மக்களுடன் பாசமாக பழகுவார்களாம்.. இப்போது அவர்கள் இல்லாததை நினைக்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது என்று கண்கலங்கி சொல்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.. 8 பேரின் சடலங்களையும் வைத்து, விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..

பிஞ்சு பிஞ்சுகள்
அமெரிக்காவில் இந்த துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த வருடம் மட்டும் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளன.. அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் மட்டும்தான் உலகிலேயே மக்கள் தொகையைக் காட்டிலும் துப்பாக்கிகள் எண்ணிக்கை அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.. அதாவது 100 பேருக்கு 120.48 துப்பாக்கி இருக்கிறதாம்.. ஆனால், எல்லாரிடமும் துப்பாக்கி இருப்பது தான் பாதுகாப்பு என்று அம்மக்கள் நினைக்கிறார்களாம்.. இருந்தாலும், மனித உயிர்களுக்கு கொஞ்சம்கூட மதிப்பு தராமல், பிஞ்சு குழந்தைகள் என்றுகூட பார்க்காமல், இப்படியா சுட்டு தள்ளுவது???












Click it and Unblock the Notifications