சுதந்திர தினத்திற்கு முன்னர் காத்திருக்கும் ஆபத்து! பூமியை நெருக்கமாக கடக்கும் விண்கல்!
நியூயார்க்: நாடு முழுவதும் வரும் 15ம் தேதி 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் 100 அடி அளவு கொண்ட பிரமாண்ட விண்கல் ஒன்று ஆக.14ம் தேதி பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வில் சிறு மாற்றம் நடந்தாலும், விண்கல் பூமியை தாக்கும் என்றும் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வுதான் வரும் 14ம் தேதி, அதாவது சுதந்திர தினத்திற்கு முன்னர் பூமிக்கு நெருக்கமாக ஆபத்தான வகையில் விண்கல் ஒன்று கடந்து செல்ல இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறது.
'2024 PH2' எனும் பெயர் கொண்ட விண்கற்கல் ஆக.14ம் தேதி பூமிக்கு நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது. ஒரு வணிக விமானத்தின் அளவு கொண்ட அதாவது 100 அடி அளவு இந்த விண்கல் பூமியிலிருந்து 11 லட்சம் கி.மீ தொலைவில் சுமார் 41,843 கி.மீ வேகத்தில் கடந்து செல்கிறது. இந்த தொலைவு மிக நீண்டதாக தெரியலாம். ஆனால் விண்வெளியை பொறுத்த அளவில் இது மிகக் குறைவான தூரம்தான். பூமியிலிருந்து செவ்வாய்க்கு 5.4 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. அப்படியெனில் 11 லட்சம் கி.மீ என்பது பூமிக்கு மிக நெருக்கம்.
நிலவுடன் ஒப்பிடும்போது, பூமிக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 4 மடங்கு தூரத்தில் இந்த விண்கல் கடந்து சென்றிருக்கிறது. அசுர வேகத்தில் செல்லும் இந்த விண்கல், அதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அப்படி பூமியை தாக்கினால் 13 கிலோ வெடிபொருளை ஒரு இடத்தில் குவித்து அதை வெடிக்க வைத்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவுக்கு தாக்கத்தை இந்த விண்கல் ஏற்படுத்தும். இன்னும் தெளிவாக சொல்வதெனில் இந்த விண்கல் தாக்கும் பகுதியில் 10-15 கி.மீ தொலைவுக்கு புல் பூண்டு கூட இருக்காது. பூமியில் 2-3 கி.மீ அளவுக்கு ஆழத்தையும் இது ஏற்படுத்தும்.
மட்டுமல்லாது விண்கல் விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் 10-11 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் உருவாகும். 100-300 மீ உயரத்தில் சுனாமி அலைகள் ஏற்படும். 50-100 கி.மீ சுற்றளவில் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும், அதேபோல 100-200 கி.மீ தொலைவில் உள்ள கட்டிடங்களில் உள்ள ஜன்னல்கள் நொறுங்கிவிடும்.
ஆனால், இப்படியான ஆபத்து எதுவும் தற்போது ஏற்படாது என்று நாசா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications