Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும் ராட்சத விண்கல்! கொஞ்சம் பாதை விலகினாலும் மொத்தமாக காலி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பூமிக்கு விண்கற்களால் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில், சுமார் 1300 அடி விட்டம் கொண்ட பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. இந்த பயணத்தின் போது விண்கல்லின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகம் விண்கற்களால் ஆனதுதான். நம் உலகம் இருக்கும் சூரிய குடும்பமும் விண்கற்களால் சூழப்பட்டிருக்கிறது. சூரியக்குடும்பம் இருக்கும் அண்டம், பால்வழி அண்டம், பேரண்டம், பிரபஞ்சம் முழுவதும் விண்கற்கள் நிரம்பி இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது பூமியில் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு விண்கல் பூமி மீது மோதியது. இந்த மோதல் காட்டு தீயையும், சுனாமியையும், எரிமலை வெடிப்பையும் ஏற்படுத்தியது. இப்படித்தான் டைனோசர்கள் அழிந்தன.

asteroid nasa earth

விண்கல் மோதியதால் ஏற்பட்ட பாதிப்பு சில நூறு ஆண்டுகள் வரை பூமியில் இருந்துக்கொண்டேதான் இருந்தது. சூரிய ஒளி கூட பூமிக்குள் நுழையாதவாறு எரிமலை புகை பூமியை போர்த்தியிருந்தது. இதனால் தாவரங்களால் நீண்ட காலத்திற்கு தாக்குபிடிக்க முடியவில்லை. வேட்டையாடியான டைனோசருக்கு இயற்கை பேரிடர்கள் ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் எரிமலை புகை பிராணவாயு பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

ஆனால் நல்வாய்ப்பாக அப்போது நடந்த மோதலுக்கு பிறகு, அந்த சைசில் பெரிய விண்கல் எதுவும் பூமியை மோதவில்லை. ஆனால் பூமிக்கு விண்கற்களால் தினமும் அச்சுறுத்தல் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் நாளை நமக்கு இருக்கும் அச்சுறுத்தல் 2007 JX2 எனும் விண்கல்தான். 1300 அடி விட்டம் கொண்ட விண்கல் ஒரு மைதானம் அளவு பெரியது. இக்கல் நாளை அதிகாலை பூமியை சுமார் 55 லட்சம் கி.மீ தூரத்தில் கடந்து செல்ல இருக்கிறது.

44,000 கி.மீ வேகத்தில் பறந்து செல்லும் இந்த விண்கல்லின் திசையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட நேராக அது பூமியை தாக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் 55 லட்சம் கி.மீ என்பது விண்வெளியை பொறுத்தவரை ரொம்ப பெரிய தூரம் எல்லாம் கிடையாது. நமக்கு பக்கத்தில் இருப்பதாக சொல்லப்படும் செவ்வாய் கிரகம் சுமார் 2 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. எனவே 55 லட்சம் கி.மீ அதை விட குறைவான தூரம்தான்.

இது பூமி மீது மோதினால் பேரழிவு ஏற்படும். லட்சக்கணக்கான அணு குண்டை வெடிக்க வைத்தால் எவ்வளவு சக்தி வெளியாகுமோ அந்த அளவுக்கு மோசமானதாக இருக்கும். இக்கல் விழுந்த இடத்தில் பெரிய பள்ளம் உருவாகும். இப்பள்ளம் மிகப்பெரிய அளவில் ஆழமானதாக இருக்கும். நிலநடுக்கம், புயல்கள், காலநிலை மாற்றம், சுனாமி போன்றவை ஏற்படும். இது கோடிக்கணக்கான உயிர்களை பலிவாங்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+