Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

28,000 கி.மீ வேகத்தில் பூமியை கடந்து செல்லும் அசுர விண்கல்! மோதினால் மொத்தம் போச்சு! நாசா எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பூமிக்கு மிக நெருக்கமாக 28,000 வேகத்தில் 290 அடி அளவுள்ள விண்கல் ஒன்று செல்ல உள்ளதாக நாசா கூறியுள்ளது. இது பூமியின் மீது மோதினால் பேரழிவு ஏற்படும் என்றும் நாசா எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

Asteroid Meteor Space

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வுதான் இன்று பூமிக்கு அருகே சிறுகோள் ஒன்று கடந்து செல்ல இருப்பதை கண்டு பிடித்திருக்கிறது.

'2024 LY2' எனும் பெயர் கொண்ட 290 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று வரும் 23ம் தேதி பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது. இது பூமியிலிருந்து சுமார் 45 லட்சம் கி.மீ தூரத்தில் பூமியை கடக்கிறது. இந்த தொலைவு மிக நீண்டதாக தெரியலாம். ஆனால் விண்வெளியை பொறுத்த அளவில் இது மிகக் குறைவான தூரம்தான். பூமியிலிருந்து செவ்வாய்க்கு 5.4 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. அப்படியெனில் 45 லட்சம் கி.மீ என்பது பூமிக்கு மிக நெருக்கம்.

நிலவுடன் ஒப்பிடும்போது, பூமிக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 15 மடங்கு தூரத்தில் இந்த விண்கல் கடந்து செல்கிறது. 28,156 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த விண்கல், அதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆனால், தற்போது இப்படியான ஆபத்து எதுவும் இல்லை என நாசா கூறுகிறது.

ஒருவேளை இது பூமியை தாக்கினால், இந்த விண்கல் விழுந்த இடத்தில் 5-8 கி.மீ தொலைவில் காண்கிரீட் கட்டிடங்கள் எதுவும் இருக்காது. அதாவது நவீன அணு குண்டுக்கு சமமான அளவு வெப்பத்தை இது வெளிப்படுத்தும். இதனால் சுமார் 2 லட்சம் மக்கள் உடனடியாக சாம்பலாகிவிடுவார்கள். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 8 கி.மீ சுற்றளவில் வெறும் நெருப்பு மட்டும் தான் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+