"ஃபியூசேரியம் கிராமினியரம்".. அமெரிக்காவிற்கு சீனா அனுப்பிய பயோ வைரஸ்.. வுஹானில் உருவாக்கப்பட்டது?
நியூயார்க்: அமெரிக்காவிற்குள் அபாயகரமான பயோ ஆயுதம்.. அதாவது பயோ வைரஸ் கிருமியை கடத்தியதாக இன்னொரு சீன ஆராய்ச்சி மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பெடரல் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளித்ததாக கூறி சீனாவைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர் ஒரு முனைவர் பட்ட மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட வுஹான் பல்கலைக்கழக மாணவர்
வுஹான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் செங்சுவான் ஹான், என்பவர் ஜூன் 8-ம் தேதி டெட்ராய்ட் மெட்ரோபொலிட்டன் விமான நிலையத்திற்கு வந்தபோது எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்தியது மற்றும் தவறான அறிக்கைகளை சமர்ப்பித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவை இரண்டும் கடுமையான குற்றங்கள் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு நேரடியாக வுஹான் ஆராய்ச்சி மையத்தோடு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பயோ ஆயுதம் வுஹானில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வுஹான் ஆராய்ச்சி பயோ ஆயுதம்
இந்த பயோ ஆயுதத்தை கடத்த மூளையாக செயல்பட்ட யுன்கிங் ஜியான் என்ற அந்த நபர், "ஃபியூசேரியம் கிராமினியரம்" எனப்படும் ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்தியதாக கூறப்படுகிறது. இது ஒரு விவசாய பயங்கரவாத கிருமி ஆகும். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வைத்து அதை ஆராய்ச்சி செய்வதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூஞ்சையினால் கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி போன்ற பயிர்களுக்கு "ஹெட் பிளைட்" என்ற நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பில்லியன் கணக்கான பொருளாதார இழப்புகளுக்கு இது காரணமாகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கைக்கூலி
ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததாகவும், சீனாவில் இந்த நோய்க்கிருமி தொடர்பான பணிகளுக்காக சீன அரசாங்கத்திடம் இருந்து நிதி பெற்றதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜியானின் காதலி சுன்யோங் லியுவும் இந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் ஒரு சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அவர் அதே நோய்க்கிருமி குறித்து ஆராய்ச்சி செய்கிறார். லியு முதலில் பொய் சொன்னதாகவும், பின்னர் ஃபியூசேரியம் கிராமினியத்தை அமெரிக்காவிற்குள் கடத்தியதை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. டெட்ராய்ட் மெட்ரோபொலிட்டன் விமான நிலையம் வழியாக அவர் அமெரிக்காவிற்குள் நுழைந்து மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டிருந்தார்.
இரு நபர்கள் மீதும் சதி, பொருட்களை அமெரிக்காவிற்குள் கடத்துதல், பொய்யான தகவல்களை அளித்தல் மற்றும் விசா மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து எஃப்.பி.ஐ தரப்பில் கூறுகையில், "அமெரிக்க நிறுவனங்களுக்குள் ஊடுருவி, நமது உணவு விநியோகத்தை குறிவைத்து தாக்குதல் CCP தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது அமெரிக்க மக்களின் உயிருக்கும், பொருளாதாரத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு செயலாகும். இதனை தடுக்க எங்களின் எஃப்.பி.ஐ தொடர்ந்து அயராது உழைக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட @FBIDetroit குழுவினருக்கும், @CBPக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நீதியின் மூலம் சரியான தீர்வு கிடைக்கும் என்றும் எஃப்.பி.ஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆபத்தான திட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அமெரிக்காவின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இது வலியுறுத்துகிறது.
-
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications