நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலத்தில் மாபெரும் சரிவு.. அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க மக்களின் மொத்த சராசரி ஆயுட்காலம் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரியளவில் சரிந்துள்ளது. கொரோனா பரவலுக்கு பின்பாக அமெரிக்க மக்களின் ஆயட்காலம் ஒன்றரை வருடம் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலம் 78.8ல் இருந்து 77.3 ஆக குறைந்து இருக்கிறது.

கொரோனா காரணமாக உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். அமெரிக்காவில் இதுவரை 35,146,476 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், 625,808 அங்கு கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு இன்னும் 5,062,265 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

தடுப்பூசி போட்டலும் விடாமல் துரத்தும் டெல்டா கொரோனா.. தப்பிப்பது எப்படி.? ஆய்வாளர்கள் புது விளக்கம்தடுப்பூசி போட்டலும் விடாமல் துரத்தும் டெல்டா கொரோனா.. தப்பிப்பது எப்படி.? ஆய்வாளர்கள் புது விளக்கம்

சரிவு

சரிவு

அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை இந்த பெருந்தொற்று பெரிய அளவில் முடக்கி போட்டுள்ளது. அதோடு அமெரிக்க மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது சராசரி ஆயுட்காலம் எனப்படும் life expectancy பெரிய சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலம் 78.8ல் இருந்து 77.3 ஆக குறைந்து இருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்க சந்திப்பும் மிகப்பெரிய சரிவு ஆகும் இது.

ஆப்ரோ அமெரிக்கர்கள்

ஆப்ரோ அமெரிக்கர்கள்

அமெரிக்க அரசு இது தொடர்பாக வெளியிட்டு இருக்கும் புள்ளிவிவரத்தின்படி ஆப்ரோ அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பானிக் மக்கள்தான் அதிகமாக ஆயுட்காலத்தை இழந்துள்ளனர். வெள்ளை அமெரிக்கர்களை விட ஆப்ரோ அமெரிக்கர்கள், ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் அதிக அளவு சராசரி ஆயுட்காலத்தை இழந்துள்ளனர். 2019 முதல் 2020 இடைவெளியில் ஆப்ரோ அமெரிக்கர்களின் ஆயுட்காலம் 2.9 வருடம் குறைந்துள்ளது.

ஹிஸ்பானிக்

ஹிஸ்பானிக்

ஹிஸ்பானிக் அமெரிக்கர்களின் ஆயுட்காலம் 3 வருடங்கள் குறைந்துள்ளது. வெள்ளை அமெரிக்கர்களின் ஆயுட்காலம் 1.2 வருடம் குறைந்து இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழக மனித உரிமை ஆய்வாளரும், நியூயார்க்கின் முன்னாள் சுகாதாரத்துறை கமிஷ்னருமான் மெரி டி பாஷாட், அமெரிக்கர்களின் ஆயுட்காலம் எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளது.

வேறுபாடு

வேறுபாடு

இந்த சரிவு அமெரிக்க மக்களிடையே இருக்கும் நிற வேறுபாட்டை வெளிக்காட்டி இருக்கிறது. ஆப்ரோ அமெரிக்கர்கள், ஹிஸ்பானிக் மக்களுக்கு இன்னும் போதிய சுகாதார வசதிகள், பொருளாதார வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவில் இருக்கும் நிற ஏற்றத்தாழ்வை இந்த சரிவு உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது, என்றுள்ளார்.

கொரோனா

கொரோனா

இந்த கொரோனா பரவல் ஆப்ரோ அமெரிக்கர்கள் மற்றும் வெள்ளையின அமெரிக்கர்கள் இடையிலான வேறுபாட்டை மேலும் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு இடையிலான வேறுபாட்டை இது மேலும் உயர்த்தி உள்ளது. பொதுவாக ஆப்ரோ அமெரிக்கர்கள், ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள்தான் அமெரிக்காவில் அதிக அப்பத்தான் பணிகளை கொரோனா சமயத்தில் மேற்கொண்டது. தூய்மை பணிகள், பஸ் டிரைவர், ஹோட்டல் பணியாளர்கள் என்று ஆப்ரோ அமெரிக்கர்கள்தான் முன்களத்தில் பணியாற்றியது.

முன்களம்

முன்களம்

இதன் காரணமாக ஆப்ரோ அமெரிக்கர்களின் ஆயுட்காலம் வெள்ளை அமெரிக்கர்களின் ஆயுட்காலத்தை விட அதிகமாக குறைந்துள்ளது. அதேபோல் இவர்கள் பொது சுகாதாரத்தை நம்பி இருப்பதாலும், போதிய மருத்துவ வசதி இவர்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்பதாலும், ஆப்ரோ அமெரிக்கர்கள் இடையே அதிக கொரோனா மரணங்கள் ஏற்பட்டதாலும் மொத்தமாக இவர்களின் ஆயுட்காலம் பெரிய சரிவை சந்தித்துள்ளது.

குறைவு

குறைவு

தற்போது கொரோனா காலத்திற்கு பின் இதே நிலை இன்னும் சில வருடங்களுக்கு நீடித்தால், இனி பிறக்கும் அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலம் 77.3 ஆகவே இருக்கும். மேலும் கொரோனா மரணங்கள் ஏற்படாமல் இருந்தால் மட்டுமே ஆயுட்காலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் கொரோனா மரணங்கள் இப்போதைக்கு முற்றிலுமாக குறைந்து போக வாய்ப்பே இல்லை. இதனால் அமெரிக்காவில் மேலும் ஆயுட்காலம் குறையும் வாய்ப்புகள் உள்ளன.

எப்படி

எப்படி

அமெரிக்காவில் கடந்த 2014க்கு பின் வேகமாக ஆயுட்காலம் உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது திடீரென கொரோனாவிற்கு பின் இது சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் 1993ல் ஆப்ரோ அமெரிக்கர்கள் வெள்ளை அமெரிக்கர்களை விட 7.1 குறைவான ஆயுட்காலம் கொண்டு இருந்தனர். இந்த இடைவெளி 4.1 ஆக 2019ல் குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக 5.8 வருடமாக இந்த இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

முக்கியமாக அமெரிக்க பெண்கள் 2019 வரை 80.2 வருடமும், ஆண்கள் 76.3. வருடமும் ஆயுட்காலம் கொண்டு இருந்தனர். பெருந்தொற்றுக்கு பின் அமெரிக்க பெண்களின் ஆயுட்காலம் 81.4 ஆகவும், ஆண்களின் ஆயுட்காலம் 74.5 ஆகவும் குறைந்துள்ளது. இது ஆயுள் ரீதியாக மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல் பொருளாதார ரீதியாக, இன ரீதியாக அமெரிக்காவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறுகிறார்கள். பல வருட அமெரிக்காவின் உழைப்பை இந்த சரிவு மொத்தமாக வீழ்த்தி உள்ளது.

English summary
After Coronavirus Pandemic the life expectancy of people in the USA decreased by one and half years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X