அமெரிக்காவில் அதிகரித்த "யுஎப்ஓ" பதற்றம்.. மொன்டானா வான்பகுதி மூடல்.. சீறிய ஜெட்கள்.. மக்கள் அச்சம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் யுஎப்ஓ தொடர்பாக பதற்றம் அதிகரித்து உள்ளது. தற்போது மொன்டானா மாகாண வான் பகுதி மூடப்பட்டு உள்ளது.

திடீரென கடந்த இரண்டு நாட்களாக யுஎப்ஓ குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது. இன்று அதிகாலைதான் கனடா வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த யுஎப்ஓ குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அமெரிக்க விமானப்படை மூலம் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது

நேற்று அமெரிக்க வானில் பறந்த மர்ம பொருள் சுடப்பட்ட நிலையில் இன்று கனடாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் குறித்த விவரம் வெளியாகவில்லை.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் யுஎப்ஓ தொடர்பாக பதற்றம் அதிகரித்து உள்ளது. தற்போது மொன்டானா மாகாண வான் பகுதி மூடப்பட்டு உள்ளது. பயணிகள் விமானம் மொன்டானா மாகாண வான் பகுதியில் பறக்க திடீர் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியிலும் யுஎப்ஓ பறந்ததா என்று குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மொன்டானா மாகாணத்தில் வடக்கு பகுதியில் யுஎப்ஓ கண்டறியப்பட்டதாக, வானில் யுஎப்ஓ சுற்றி வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக மக்கள் சிலர் போஸ்ட்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மூடல்

மூடல்

இந்த நிலையில்தான் அந்த வான்பகுதி மூடப்பட்டு உள்ளது. யுஎப்ஓ காரணமாக மூடப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இதற்கு பின் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மொன்டானா செனட்டர் ஜான் டெஸ்டர் இது குறித்து கூறுகையில், மொன்டானா வான்வெளியில் பறந்த பொருளைப் பற்றி எனக்குத் தெரியும். அதை பற்றி கேள்விப்பட்டேன். DOD மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். அவர்களிடம் விவரங்களை கேட்டு வருகிறேன். நான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். என்ன நடந்தாலும் உடனே மக்களிடம் அது பற்றி தெரிவிப்பேன் என்று கூறி உள்ளார். இதன் மூலம் மொன்டானா வான்வெளியில் எதோ ஒன்று பறந்ததாக அவர் கூறியது உறுதியாகிறது. இன்னொரு பக்கம் போரட்டலாண்டில் திடீரென அமெரிக்க போர் விமானங்கள் சுற்றி திரிவதால் அங்கேயேயும் யுஎப்ஓ பறக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.அமெரிக்க ஜெட்கள் இங்கே சீறிப்பாய்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 மொன்டானா வான்வெளி

மொன்டானா வான்வெளி

நேற்று அதிகாலை அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் இந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது. எந்த ஒரு விமானம் அல்லது பறக்கும் பொருள் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தாலும் அதை யுஎப்ஓ என்றுதான் அழைப்பார்கள். அலாஸ்கா மீது பறந்து கொண்டு இருந்த போது அதை அமெரிக்கா விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளனர். கிட்டத்தட்ட கார் அளவிற்கு இந்த யுஎப்ஓ இருந்துள்ளது. இந்த பறக்கும் பொருள் யாருக்கும் சொந்தமானது என்று தெரியவில்லை.

குழப்பம்

குழப்பம்

மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த பொருள் இருந்தது. இது எங்கே இருந்து பறக்க தொடங்கியது என்பது தெரியவில்லை. இதை அமெரிக்க அதிபர் பிடன்தான் சுட்டு வீழ்த்த சொன்னார் என்று பென்டகன் தெரிவித்து உள்ளது. இந்த பொருள் மிகவும் சின்னதாக இருந்தாதாகவும். இதில் பைலட் இல்லை. இந்த விமானத்தை திசை மாற்றுவதற்கான பொருட்கள் எதுவும் அதில் இல்லை. அது வெறுமனே வானில் பறந்து இருக்கிறது. பயணிகள் விமானம் பறக்கும் 30 ஆயிரம் அடி உயரத்திற்கும் மேலாக 40 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பறந்து உள்ளது. இடை இடையே கொஞ்சம் உயரம் குறைவாகவும் பறந்து உள்ளது. இதனால் பயணிகள் விமானத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை சுட்டு வீழ்த்தி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+