ஷாக்.. அமெரிக்காவை அடுத்து கனடா வானிலும் பறந்த "யுஎப்ஓ".. சுட்டு வீழ்த்தப்பட்டது.. அதிகரித்த பதற்றம்
வெடித்து சிதற வைக்கப்பட்ட யுஎப்ஓ பொருட்கள் அமெரிக்கா - கனடா எல்லையில் விழுந்துள்ளது. இதன் பொருட்களை மீட்க அமெரிக்க ராணுவம் விரைந்துள்ளது.
நியூயார்க்: கனடா வானில் பறந்த மர்ம பொருள் இன்று அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்க விமானப்படை மூலம் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
நேற்று அமெரிக்க வானில் பறந்த மர்ம பொருள் சுடப்பட்ட நிலையில் இன்று கனடாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கனடா மற்றும் அமெரிக்க ராணுவம் கூட்டாக இணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொண்டு உள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் குறித்த விவரம் வெளியாகவில்லை. அடுத்தடுத்து இரண்டு நாட்களில் 2 முறை மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்கா தாக்குதல்
நேற்று அதிகாலை அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் இந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது. எந்த ஒரு விமானம் அல்லது பறக்கும் பொருள் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தாலும் அதை யுஎப்ஓ என்றுதான் அழைப்பார்கள். அலாஸ்கா மீது பறந்து கொண்டு இருந்த போது அதை அமெரிக்கா விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளனர். கிட்டத்தட்ட கார் அளவிற்கு இந்த யுஎப்ஓ இருந்துள்ளது. இந்த பறக்கும் பொருள் யாருக்கும் சொந்தமானது என்று தெரியவில்லை. மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த பொருள் இருந்தது.

குழப்பம்
இது எங்கே இருந்து பறக்க தொடங்கியது என்பது தெரியவில்லை. இதை அமெரிக்க அதிபர் பிடன்தான் சுட்டு வீழ்த்த சொன்னார் என்று பென்டகன் தெரிவித்து உள்ளது. இந்த பொருள் மிகவும் சின்னதாக இருந்தாதாகவும். இதில் பைலட் இல்லை. இந்த விமானத்தை திசை மாற்றுவதற்கான பொருட்கள் எதுவும் அதில் இல்லை. அது வெறுமனே வானில் பறந்து இருக்கிறது. பயணிகள் விமானம் பறக்கும் 30 ஆயிரம் அடி உயரத்திற்கும் மேலாக 40 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பறந்து உள்ளது. இடை இடையே கொஞ்சம் உயரம் குறைவாகவும் பறந்து உள்ளது. இதனால் பயணிகள் விமானத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை சுட்டு வீழ்த்தி உள்ளனர்.

கனடா எல்லை
இதன் பொருட்கள் அமெரிக்கா - கனடா எல்லையில் விழுந்துள்ளது. இதன் பொருட்களை மீட்க அமெரிக்க ராணுவம் விரைந்துள்ளது. இந்த நிலையில்தான் அலாஸ்கா எல்லையில் கனடா வானில் யூகான் பகுதி அருகே பறந்த மர்ம பொருள் இன்று அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்க விமானப்படை மூலம் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. நேற்று அமெரிக்க வானில் பறந்த மர்ம பொருள் சுடப்பட்ட நிலையில் இன்று கனடாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கனடா மற்றும் அமெரிக்க ராணுவம் கூட்டாக இணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொண்டு உள்ளது. கனடா - அமெரிக்கா ராணுவம் இணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொண்டு உள்ளன. இந்த மர்ம பொருள் குறித்த விவரம் வெளியாகவில்லை.

ஜஸ்டின் ட்ரூடோ
கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் அந்த பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வெடித்து சிதறவைக்கப்பட்ட பாகங்களை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இது பைலட் இல்லாமல் இது எப்படி பறந்தது? இது எந்த நாட்டிற்கு சொந்தமானது? ஏலியன் விமானமா இது? எதற்காக பறந்தது? மக்களுக்கு இது ஆபத்து விளைவிக்குமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அடுத்தடுத்து வானில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்தான் சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன்கள் பறந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம் சீனாவிற்கு என்ன மாதிரியான உளவு தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பப்பட்டன என்று விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. வடக்கு அமெரிக்க மேலே சீனாவின் இந்த ராட்சச பலூன் பறந்து கொண்டு இருந்தது. இந்த பலூன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டது.

சீனா
சீனாவின் உளவு பலூன் இது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. முதலில் வெள்ளை நிறத்தில் எதோ பறக்கிறது என்று மட்டுமே கூறப்பட்டது. காரணம் பயணிகள் விமானம் பறக்கும் உயரம், போர் விமானம் பறக்கும் உயரத்திற்கும் அதிகமாக 30 கிமீ உயரத்திற்கு அருகே இந்த பலூன்கள் பறந்து கொண்டு இருந்தன. பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அதில் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்கை அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளன. பெரிய ராட்சச சோலார் பேனல்கள் இதில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு இவை ஹீலியம் உதவியுடன் வானில் பறந்து வந்துள்ளன. அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுக்கு மேலே இவை பறந்து இருக்கின்றன. முதலில் இதை சீனா தங்களுடைய பலூன் இல்லை என்றது. இந்த பலூன் எங்களுடைய பலூன் கிடையாது. இதற்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது என்று சீனா கூறி வந்தது. அதன்பின் இது எங்களுடைய பலூன்தான். அட்லாண்டிக் கடலில் சர்வதேச எல்லையில்தான் இது பறந்து கொண்டு இருந்தது. இது வானிலைகக்காக பறக்க விடப்படும் பலூன். வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை. ஆனால் இதை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று சீனா கூறியது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications