டார்கெட்.. 70 சதவீத பேருக்கு தடுப்பூசி.. ஒரே மாதத்தில் இலக்கை எட்டியது ஜோபிடன் அரசு.. விறுவிறு பணி
அமெரிக்காவில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் வேகமெடுத்து வருகின்றன
நியூயார்க்: அமெரிக்காவில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தும் இலக்கு எட்டப்பட்டுவிட்டது.. இதையடுத்து, கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பிறகு தன்னுடைய இலக்கை அடைந்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.. உயிரிழப்பு மொத்த எண்ணிக்கையிலும் அமெரிக்காவே முதலிடத்தில் தொடர்ந்து உள்ளது..
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன...

டிஸ்சார்ஜ்
உலக அளவில் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியை கடந்துள்ளது. அதேசமயம் வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.. கொரோனா தொற்றுக்கு இதுவரை இங்கு 42 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்... 64 பேர் பலியாகி உள்ளனர்...

அரசு
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா போன்ற நாடுகளில் டெல்டா வகை வைரஸே எதிரொலிக்கிறது என்று நிபுணர்கள் சொல்லி வருகிறார்கள். இதனால், அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.. கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அந்த அரசே அறிவித்தும் வந்தது..

அமெரிக்கா
எனவே, அமெரிக்க மக்கள் தொகையில் 49 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவானது.. அந்த நடவடிக்கையில் அரசு இறங்கி வரும் சமயம், திடீரென, 60 ஆயிரத்துக்கும் மேல் புது கேஸ்கள் வர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது...

வைரஸ்
டெல்டா வகை வைரஸ் பரவல்தான், இந்த தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.. அதாவது தடுப்பூசி செலுத்துவது உபயோகமாக இருக்கும் அதேசமயம், டெல்டா வகை வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று தெரியவந்துள்ளது... இதற்கான ஆய்வுகளும் சமீபகாலமாக எடுக்கப்பட்டுள்ளன.. இதையடுத்துதான், ஒருபக்கம் மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்து, மற்றொரு பக்கம் தடுப்பூசிகள் செலுத்துவதில் தீவிரப்படுத்துவது என பிடன் அரசு படுதீவிரத்தில் இறங்கி உள்ளது.

பாதிப்பு
முன்னதாக, அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ந் தேதிக்குள் அமெரிக்காவில் தகுதி வாய்ந்தவர்கள் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் மட்டுமாவது தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜோ பிடன் அறிவித்திருந்தார்.. அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்..
Recommended Video

தடுப்பூசிகள்
இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வந்தது... ஆனால் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தும் இலக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை ஜூலை 4-ந் தேதிக்குள் அடைய முடியாமல் போய்விட்டது.. எனினும், அந்த இலக்கு நேற்றைய தினம் எட்டப்பட்டுவிட்டது.. சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு பிடன் நிர்வாகம் தன்னுடைய இலக்கை அடைந்துள்ளது.

ஜோ பிடன்
பெரியவர்களில் 60.6 சதவீதம் பேருக்கும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 49.7 சதவீதம் பேருக்கும் 2 டோஸ்களுமே செலுத்தப்பட்டு விட்டன.. அதேபோல, தெற்கு, மத்திய மேற்கு இளைஞர்களிடம் தடுப்பூசி செலுத்தும் விகிதங்கள் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது... அமெரிக்காவில் இப்போது டெல்டா வகை மாறுபாட்டால் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது... அங்கு நேற்று புதிதாக 56 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications