Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமானம் சைஸில் விண்கல்.. அக்.24ல் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கும் நாசா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: விண்கற்களால்தான் பூமிக்கு பெரிய ஆபத்து காத்திருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பூமிக்கு மிக நெருக்கமாக விமானம் சைஸ் கொண்ட விண்கல் ஒன்று பறந்து செல்ல இருப்பதாக நாசா அலர்ட் செய்திருக்கிறது.

பூமி உள்ளிட்ட கிரகங்கள் உருவானதே விண்கற்களால்தான். இருப்பினும், பூமி எந்த விண்கல்லின் பகுதி? என்பது சரியாக தெரியவில்லை. மட்டுமல்லாது கடந்த சில கோடி வருடங்களாக பூமியின் மீது உயிரினங்கள் வாழ்ந்து வருவதால், பூமியின் மண் மீது ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. இது மண்ணின் தன்மையை மாற்றியிருக்கிறது. எனவேதான் பூமியில் உள்ள மண்ணை ஆய்வு செய்தால், முழுமையான விவரங்கள் கிடைப்பதில்லை.

asteroid nasa

ஆகவே விண்கற்களையும், மற்ற கிரகங்களையும், நிலவுகளையும் நாம் தேடி தேடி ஆய்வு செய்து வருகிறோம். எந்த ஆய்வு பூமியின் ரகசியத்தை நமக்கு கூறும் என்று நம்பியிருக்கிறோமோ, இதே விண்கற்கள்தான் பூமியை அழிக்கவும் வல்லது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர் அழிந்ததும் விண்கற்கள் மோதலினால்தான்.

இப்படி இருக்கையில், தற்போது 170 அடி அளவுள்ள விண்கல் ஒன்று, மணிக்கு 20,832 கி.மீ வேகத்தில் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாக நாசா தெரிவித்திருக்கிறது. 2024 TP17 என பெயரிடப்பட்ட இந்த விண்கல் பூமியை 46,40,000 கிலோமீட்டர் தொலைவில் வரும் 24ம் தேதி கடந்து செல்ல இருக்கிறது. 46 லட்சம் கி.மீ என்பது மிகப்பெரிய தொலைவாக தெரியலாம். ஆனால், நமக்கு பக்கத்தில் உள்ள செவ்வாய் கிரகம் சுமார் 22.5 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. எனவே, 46 லட்சம் என்பது பூமிக்கு நெருக்கமான தொலைவுதான்.

ஒருவேளை இந்த விண்கல் பயணிக்கும் பாதையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு, அது பூமி பக்கம் திரும்பினால் மிகப்பெரிய பேரிழிவு ஏற்படும். அதாவது, ஒரே நேரத்தில் 1400 மெகா டன் டிஎன்டி வெடிப்பொருள் வெடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவுக்கு பாதிப்பை இந்த விண்கல் ஏற்படுத்தும். 2 கி.மீ விட்டத்தில் 400 அடி ஆழத்திற்கு இந்த விண்கல் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்தும். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 150 கி.மீ தொலைவுக்கு பெரும் அதிர்வலைகள் பரவும். நிலநடுக்கம் மிக மோசமானதாக இருக்கும். கடலில் விழுந்தால் 100 மீ உயர்த்திற்கு சுனாமியை ஏற்படுத்தும்.

இதனால் உடனடியாக பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாகும். தவிர, உற்பத்தி பாதிப்பு, பொருளாதார பாதிப்பு, வறுமை, வேலையின்மை, இது ஏற்படுத்தும் பசி, பஞ்சம் காரணமாக மேலும் லட்சக்கணக்கான மக்கள் நாளடைவில உயிரிழப்பார்கள் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

ஆனால் இந்த விண்கல் தனது பாதையிலிருந்து தடம் மாற வாய்ப்பே இல்லை என்பதுதான் இப்போதைக்கு சொல்லப்பட்டுள்ள ஒரே நல்ல விஷயம். இது போன்ற ஆபத்து ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் மக்களே?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+