2032 டிசம்பர் 22.. இந்த தேதியில் பூமியை தாக்கும் விண்கல்! தமிழ்நாடு வேற நெருக்கமாக இருக்கே!
நியூயார்க்: 2024 YR4 எனும் விண்கல் 2032ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். இந்த கல் எந்த இடத்தை தாக்கும் என்பது குறித்தும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
நாம் வாழும் சூரிய குடும்பத்தில் ஆயிரக்கணக்கான விண்கற்கள் இருக்கின்றன. இந்த பூமியும் சூரியனும் கூட விண்கற்களால் தான் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படி கிரகங்களையும் சூரியன்களையும் உருவாக்கி மீதமுள்ள விண்கற்கள் நமது சூரிய குடும்பத்தில் அனாமதேயமாக சுற்றி வருகின்றன. இந்த விண்கற்கள் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே கூறி வருகின்றனர். எனவே விண் கற்களை ஆய்வு செய்யும், கண்காணிக்கும் பணிகளை நாசா போன்ற விண்வெளி ஆய்வு அமைப்புகள் சில ஆண்டுகளாக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் இப்படியான ஆய்வு ஒன்றின் போது 2024 YR4 எனும் விண்கல் பூமிக்கு நெருக்கமாக வரும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த விண்கல் சூரியனை சுற்றிவிட்டு தற்போது சூரிய குடும்பத்திற்கு வெளியே செல்ல தயாராகி வருகிறது. இது 2028 ஆம் ஆண்டு பூமிக்கு நெருக்கமாக வரும் என்றும் ஆனால் பூமியை மோதாமல் சென்று விடும் என்றும் பின்னர் 2023ல் பூமியை மோதும் என்றும் விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.
இந்த விண்கல் மோதினால் மோதிய இடத்தில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புல் பூண்டு கூட இருக்காது. தற்போதைய ஆய்வின்படி, இந்த விண்கல் பூமி மீது மோதுவதற்கான வாய்ப்பு 2.3% தான் இருக்கிறது என நாசா விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். இருப்பினும் 2028 ஆம் ஆண்டு பூமிக்கு நெருக்கமாக வரும் பொழுது தான் இது எந்த அளவுக்கு பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை கணிக்க முடியும்.
இப்போதைய கணிப்பின்படி 2032 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி இந்த கல் பூமியை தாக்கும் என தெரிய வந்திருக்கிறது. துல்லியமாக எந்த பகுதியை இந்த விண்கல் தாக்கும் என்பதை கணிக்க முடியாவிட்டாலும், சில குறிப்பிட்ட பகுதியை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். அதன்படி தெற்கு அறை கோளத்தை இந்த கல் தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் பூமத்திய ரேகையை ஒட்டி உள்ள பகுதியை தாக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கணித்திருக்கிறார்கள்.
அதாவது தென் அமெரிக்கா தெற்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளை இந்த விண்கல் தாக்கும். இதில் தெற்கு ஆசியா பகுதியில்தான் இந்தியா இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மாநிலம் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக அமைந்திருப்பதால் இது தாக்கப்படுமோ என்கிற அச்சம் பரவலாக எழுந்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications