பெண் HR-ஐ கட்டிப்பிடித்த சிஇஓ! டக்கென கேமரா ஃபோகஸ் செய்ததால் அம்பலமான கள்ள உறவு
நியூயார்க்: பிரபல ஏஐ நிறுவனத்தின் தலைவர் தனது கம்பெனியில் வேலை செய்யும் ஒருவருடனேயே திருமணத்தைத் தாண்டி உறவில் இருந்துள்ளார். இருவரும் சமீபத்தில் அங்கு நடந்த பிரபல கோல்ட்பிளே இசைக் கச்சேரியில் பங்கேற்கச் சென்றுள்ளனர். அவர்கள் அரவணைத்துக் கொண்டு இருந்த வீடியோ பெரிய திரையில் வந்த நிலையில், அவர்களின் ரகசிய உறவு அம்பலமாகியுள்ளது.
நமது ஊர்களில் எப்படிச் சினிமாவுக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கும் பெரிய கூட்டம் கூடுமோ அதுபோலத் தான் அமெரிக்காவில் எப்போதும் இசைக் கச்சேரிகளுக்குக் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த இசை நிகழ்ச்சிகளில் பலரும் ஆர்வமாகக் கலந்து கொள்வார்கள். அப்படி இசை நிகழ்ச்சிக்குப் போன ஒரு சிஇஓவின் ரகசிய உறவு தான் இப்போது அம்பலமாகியுள்ளது.

சிக்கிய ஜோடி
அங்குப் பிரபல இசைக்குழுவான கோல்ட்பிளேயின் கச்சேரியில் நடந்தது. அதில் தான் பிரபல ஆஸ்டிரானமர் என்ற ஏஐ நிறுவனத்தின் சிஇஓ ஆன ஆண்டி பைரன் மற்றும் அந்நிறுவனத்தின் ஹெச்.ஆர் தலைவர் கிறிஸ்டின் காபோட் ஆகியோர் கட்டியணைத்தபடி இருந்துள்ளனர். அது திடீரெனப் பெரிய திரையில் ஒளிபரப்பப்படவே அவர்கள் ஒரு நொடி அதிர்ந்து போனார்கள். பாஸ்டனில் உள்ள ஜில்லெட் ஸ்டேடியத்தில் நடந்த கோல்ட்பிளேயின் இசை நிகழ்ச்சியின்போது தான் இந்தச் சம்பவம் நடந்தது.
முத்த கேமரா
அமெரிக்காவில் பொதுவாகவே முத்த கேமரா என்ற ஒன்று விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் இருக்கும். அதாவது இந்த கிஸ் கேமராவில் பொதுவாகத் தம்பதிகளைத் தான் காட்டுவார்கள். அதுபோல தம்பதிகள் காட்டப்படும்போது, அவர்கள் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்த வேண்டும். இதுவே அங்கு வழக்கமாக இருக்கும். அப்படியொரு கிஸ் கேமராவில் தான் பைரனும், கிறிஸ்டினும் மாட்டிக் கொண்டனர்.
பெரிய திரையில் பைரனும், காபோட்டும் ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி இருந்தனர்.. கேமரா அவர்களை நெருங்கியதும், இருவருமே அதிர்ந்து போனார்கள். உடனே ஆண்டி பைரன் தலையில் கை வைத்தபடி அப்படியே உட்கார்ந்துவிட்டார். அதேபோல கிறிஸ்டின் முகத்தை மறைத்தபடி அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
ரகசிய உறவு
இதைப் பார்த்தவுடன் கோல்ட்பிளே பாடகர் கிறிஸ் மார்ட்டின், "அட! இவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்க... ஒன்னு ரகசிய உறவா இருக்கணும்.. இல்லனா ரொம்ப வெட்கப்படுவதாக இருக்க வேண்டும்" என்று கிண்டலாகக் கூறினார். இதைக் கேட்டதும் அங்கு அரங்கம் முழுக்கவே சிரிப்பலை எழுவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
நெட்டிசன்கள்
இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகள் கூறி வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "கணவர் தன்னை ஏமாற்றுவது மனைவிக்கு நிச்சயம் வருத்தமாக இருக்கும். ஆனால், அது இதுபோல வெளிச்சத்திற்கு வந்து அவமானப்பட்டது மகிழ்ச்சியையே தரும்" என்றார். மற்றொரு நெட்டிசன், "இருவரும் முட்டாள்கள். ரகசிய உறவில் இருக்கும் போது ஏன் இசைக் கச்சேரியில் இப்படிக் கட்டிப்பிடித்து இருக்க வேண்டும்" என்றார். மற்றொரு தரப்பினர் இவர்களுக்கு இது தேவை தான் என்பது போலவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த நிறுவனத்தில் இருக்கும் டாக்சிக் ஓர்க் கலாச்சாரம் குறித்த விவாதத்தையும் எழுப்பியுள்ளது. அதேநேரம் இந்தச் சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனமோ அல்லது ஆண்டி பைரனோ இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. அவர்களின் மவுனம் மேலும் மேலும் இருவரின் உறவு குறித்த விவாதத்தையே எழுப்புவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications