வானில் தோன்றிய "மர்ம" பொருள்.. அதுவும் 40,000 அடி உயரத்தில்.. சுட்டுதள்ளிய ராணுவம்.. அமெரிக்கா பகீர்
வானில் பறந்த மர்மபொருளை சுட்டுவீழ்த்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது
நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில், அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று பறந்து கொண்டிருந்தாகவும் அதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்றும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே வாரம் முழுவதும் ராட்சத பலூன் விவகாரம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி, அதிர்ச்சியை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளவாடப் பகுதிகளின் வான்பரப்பில் மர்ம பலூன் ஒன்று தென்பட்டது... அந்த நொடி முதலே, அந்த மர்ம பலூன் பற்றிய சந்தேகங்களும், சர்ச்சைகளும் வலம் வரத்துவங்கிவிட்டன.

மெகா பலூன்
எங்கள் நாட்டை உளவு பார்க்க இந்த பலூனை அனுப்பியிருக்கிறது சீனா என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது... உலக நாடுகள் இந்த விவகாரத்தை உற்றுநோக்கிய நிலையில், கடந்த சனிக்கிழமை சீனாவின் உளவு, பலூனை சுட்டு வீழ்த்திவிட்டதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு முதலில் மறுப்பு தெரிவித்த சீனா, பிறகு ஒப்புக் கொண்டது. "ஆமா, வானில் பறந்த பலூன் எங்களுடையதுதான்... வானிலை ஆய்வுக்காகப் பறக்கவிடப்பட்ட பலூன், காற்றின் வேகம் மாறுபடுதல் காரணமாக திசை மாறி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டது" என்ற விளக்கம் தந்தது.

ஆகாய கப்பல்
ஆனால், சீனாவின் விளக்கத்தை ஏற்க மறுத்த அமெரிக்கா, தனது கடும் கண்டனங்களை, இந்த விவகாரத்தில் பதிவு செய்தது.. எனினும், அட்லாண்டிக் கடலில் விழுந்த பலூனின் பாகங்களை ராணுவ வீரர்கள் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.. வானிலையை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட ஆகாய கப்பல் வகைதான் என்று சீனா தெரிவித்திருந்தும், அது சுட்டு வீழ்த்தப்பட்டதால் சீனா கடும் ஆத்திரம் அடைந்தது.... இதனிடையே அமெரிக்கா மட்டுமல்லாது சீன விமானப் படையால் இயக்கப்படும் இந்த உளவு பலூன்களானது இதுவரை 5 கண்டங்களை கடந்துள்ளதாகவும், இந்தியா, ஜப்பான், வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளை உளவு பார்த்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மர்ம பொருள்
இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு பரபரப்பு கிளம்பி உள்ளது.. அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் பறந்ததாம்.. இதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.. வடமேற்கு மாநிலமான அலாஸ்கா மீது குறித்த பொருள் பறந்ததாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி இதுகுறித்து விளக்கம் ஒன்றினை தந்துள்ளார்.

ஒரே மர்மம்
"அந்த பொருள் என்னவென்றே தெரியவில்லை.. அலாஸ்கா மீது பறந்த பொருளானது 40,000 அடி உயரத்தில் காணப்பட்டது.. பயணிகள் விமானங்களுக்கு அது அச்சுறுத்தலாக மாற வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்டது.. அதனால், ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவுக்கிணங்க, அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தி விட்டோம்" என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, அந்த பொருள் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை, ஆனால், கடந்த வாரம் அமெரிக்க வான்பரப்பில் காணப்பட்ட சீன பலூனை விடவும் அளவில் சிறியதாக காணப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.. இதன் நோக்கம் என்ன என்பது குறித்து தங்களுக்கு தகவல் இல்லை, அதன் மிச்சங்களை மீட்டெடுத்து, அவைகளை ஆய்வுக்கு உட்படுத்தப்போகிறோம் என்றும் மேலும் தெரிவித்துள்ளனர்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications