அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு தாக்கம்! பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை தொட்டது!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தற்போதுவரை டிரம்ப் முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. 1 பிட்காயினுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு $ 72,000 ஆக அதிகரித்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்திய நேரப்பபடி காலை 10 மணி நிலவரப்படி, ஜனநாயக கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் 47.2% வாக்குகளையும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 51.4% வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். இது டிரம்பின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த முடிவுகள் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது பிட் காயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

1 பிட்காயினுக்கு நிகரான அமெரிக்க டாலின் மதிப்பு $ 72,000ஆக அதிகரித்துள்ளது. எக்கனாமிக்ஸ் டைம்ஸ் கூற்றுப்படி, இன்ற காலை 8:50 மணி நிலவரப்படி, பிட்காயின் மதிப்பு 8.4% அதிகரித்து $75,060 ஆகவும், ஈதர் மதிப்பு 7.2% உயர்ந்து $2,576 ஆகவும் நிர்ணயமாகியிருக்கிறது என தெரியவந்திருக்கிறது. தனித்தனியாக குறிப்பிடுவதெனில், BNB (+5%), சோலானா (+13.5%), XRP (+5%), Dogecoin (+21.6%), கார்டானோ (+6.6%), ஷிபா இனு (+10%) அவலாஞ்சே (+12.3%), செயின்லிங்க் (+11.4%) என மதிப்புகள் அதகரித்திருக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினின் மார்க்கெட் கேப் $1.445 டிரில்லியனாக உயர்ந்துள்ளது என்றும் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டிருக்கிறது.
ட்ரம்ப் தொடக்கம் முதல் பிட்காயின் குறித்து விமர்சித்துதான் வந்திருக்கிறார். தனக்கு பிட்காயின் பயன்பாட்டில் எந்த நம்பிக்கையும், உடன்பாடும் இல்லையென்று கூறியிருக்கிறார். உலகின் இரும்பு நாணயமாக டாலர் மட்டுமே இருப்பதாகவும், டாலருக்கு நிகரான ரூபாய் வேறு ஏதும் இல்லை என்றும் அவர் கூறி வந்திருக்கிறார். ஆனால் இவர் அதிபராக இருந்த காலத்தில் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவோ, ஒழிக்கவோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதே நேரத்தில் அதை ஆதரிக்கவும் இல்லை. எனவே, கிரிப்டோ கரன்சி பயன்பாட்டாளர்கள் டிரம்ப் ஆட்சியில் எந்த இடையூறையும் சந்திக்கப்போவதில்லை. இதுவே கூட பிட்காயின் மதிப்பு உயர்வதற்கான காரணமாக இருக்கலாம்.
கடந்த ஜூலை மாதம் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பிட்காயின் மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது. ஏனெனில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், ட்ரம்பின் வெற்றியை உறுதி செய்திருந்தது என்று பலரும் கருதியிருந்தனர். இன்று ட்ரம்பின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது. எனவே பிட்காயின் மதிப்பு மீண்டும் உயர்ந்திருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications