நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கை குலுக்கினார்.. நெருக்கமாக இருந்தார்.. இப்போது கொரோனா.. டிரம்பை சந்தித்த அதிகாரிக்கு வைரஸ்.. ஷாக்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபரை சந்தித்த பிரேசில் அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி.. கர்நாடகாவை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் வேகம் சீனாவில் குறைந்துள்ள நிலையில் அமெரிக்காவில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் 1,716 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 41 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.

    அமெரிக்காவில் வாஷிங்க்டன் நகரம்தான் வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த வாஷிங்க்டன் நகரமும் இதனால் மூடப்பட்டுள்ளது.

    அதிசயம்.. சீனாவில் வேகம் குறைந்த கொரோனா.. நேற்று ஒருவர் மட்டுமே பலி.. 4 பேருக்கு பாதிப்பு.. ஆனால்! அதிசயம்.. சீனாவில் வேகம் குறைந்த கொரோனா.. நேற்று ஒருவர் மட்டுமே பலி.. 4 பேருக்கு பாதிப்பு.. ஆனால்!

    பிரேசில் நிலை

    பிரேசில் நிலை

    இந்த நிலையில் அமெரிக்க அதிபரை சந்தித்த பிரேசில் அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பிரேசில் பிரதமர் ஜெயிர் போலிஸோனாரா அதிபர் டிரம்ப் உடன் சந்திப்பு நடத்தினார். வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது. பிரேசில் அதிகாரிங்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். அதிபர் டிரம்ப் அந்நாட்டு அதிகாரிகள் எல்லோரையும் இதில் கை, கொடுத்து, கட்டிப்பிடித்து வரவேற்றார்.

    பிரதமர் நிலை

    பிரதமர் நிலை

    இந்த சந்திப்பில் பிரேசில் பிரதமரின் தகவல் தொடர்பு செயலாளர், பேஃபியோ வாஜ்கார்டன் கலந்து கொண்டார். இந்த நிலையில் தற்போது பேஃபியோ வாஜ்கார்டனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு நேற்று முதல் நாள் காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் அவரின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில், இவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அமெரிக்காவை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பேஃபியோ வாஜ்கார்டன் அதிபர் டிரம்புடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். டிரம்பிற்கு கைகொடுத்து, அவருக்கு அருகில் பேஃபியோ வாஜ்கார்டன் இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனால் அதிபர் டிரம்பிற்கும் இந்த வைரஸ் தாக்கி இருக்குமா? அவருக்கு சோதனை செய்யப்பட்டதா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

    கவலை இல்லை

    கவலை இல்லை

    ஆனால் எனக்கு இந்த வைரஸ் குறித்து கவலையே இல்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் எதுவும் புதிதாக செய்யவில்லை. எனக்கு அதனால் கவலை இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். அதே சமயம் வெள்ளை மாளிகை இதுகுறித்து தெரிவிக்கும் போது, டிரம்பிற்கும் காய்ச்சல் எதுவும் இல்லை. அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. அதனால் இவரை சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று கூறியுள்ளார்.

    English summary
    Brazilian PM's official who met Trump gets Coronavirus, White house says no need for testing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X