Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாவ்.. அமெரிக்காவில் குறைந்த புற்றுநோய் மரணங்கள்.. வாழ்க்கை முறையில் செய்த சின்ன மாற்றங்கள் காரணம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வந்த புற்றுநோய் மரணங்களில் இருந்து அந்நாட்டு மக்கள் சிறிது சிறிதாக விடுபட்டு வருவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க மக்கள் மத்தியில் அரசாங்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வும், அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திக் கொண்ட சிறு சிறு மாற்றமுமே இந்த அளவுக்கு பெரிய பலனை தந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா மேற்கொண்ட இந்த முயற்சியை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 நோய் அண்டாத மனிதர்கள்..

நோய் அண்டாத மனிதர்கள்..

ஒருகாலத்தில், மனிதர்களிடத்தில் பொருளாதார வசதி குறைவாக இருந்தாலும் நோய் பாதிப்புகள் ஏதும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தனர். அதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. உடல் உழைப்பு, ரசாயன கலப்பு இல்லாத இயற்கை உணவுகள், சுத்தமான குடிநீர் ஆகியவை அவர்களுக்கு கிடைத்தது. அதனால்தான், கொடிய நோய்கள் கூட அவர்களை அண்டாமல் இருந்தது. ஆனால், இன்றோ நிலைமை அப்படியே தலைகீழாகி விட்டது.

 விஸ்வரூபம் எடுத்த புற்றுநோய்..

விஸ்வரூபம் எடுத்த புற்றுநோய்..

மக்களிடத்தில் பணப்புழக்கமும், வசதி வாய்ப்புகளும் பெருகப் பெருக, வாயில் நுழையாத நோய்களும் மனிதர்களை தாக்க தொடங்கிவிட்டன. அறிவியல் வளர்ச்சியால் மனிதர்களின் உடல் உழைப்பு அடியோடும் குறைந்துபோனதும், கெமிக்கல் கலந்த உணவும் குடிநீரும் அதிகரித்ததுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் 30 வயது நெருங்குவதற்குள்ளேயே சர்க்கரை நோயாலும், 10 வயதுக்குள்ளாகவே உடல் பருமன் நோயாலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மேலும், மனிதக்குலத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் புற்றுநோயும் பெருகிவிட்டது. முன்பு ஊரில் ஒருவருக்கு என்ற எண்ணிக்கையில் காணப்பட்ட புற்றுநோய், இன்று தெருவில் ஒருவருக்கு என மாறியுள்ளது.

 கதிகலங்கும் அமெரிக்கா..

கதிகலங்கும் அமெரிக்கா..

உலக நாடுகள் எங்கும் புற்றுநோய் காணப்பட்டாலும், மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் இதன் பாதிப்பு கணிசமாக உள்ளது. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் உணவு முறைகளில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றமே இன்று புற்றுநோய் தலைநகரமாக அமெரிக்கா மாறுவதற்கு காரணமாக இருக்கிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டறியப்படுவதாக அதிர்ச்சி செய்தி வெளியானது. 2019-ம் ஆண்டில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர்.

 விழிப்புணர்வால் கிடைத்த பலன்

விழிப்புணர்வால் கிடைத்த பலன்

இந்நிலையில், அமெரிக்காவில் புற்றுநோய் பெருகுவதை தீவிரமாக எடுத்துக்கொண்ட அந்நாட்டு அரசாங்கம், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் முழுவீச்சாக இறங்கியது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. துரித உணவு உட்பட ரசாயனம் கலந்த உணவுகளை தவிர்ப்பது; ரசாயனம் அதிகம் சேர்க்கப்பட்ட வெளிப்பூச்சு பொருட்களை ஒதுக்குவது; உடற்பயிற்சியில் ஈடுபடுவது; சத்தான இயற்கை உணவுகளை உட்கொள்வது போன்ற விழிப்புணர்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனை மக்களும் பின்பற்றத் தொடங்கினர். இதனால் அமெரிக்காவில் புற்றுநோய் பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 நல்ல சமிக்ஞை

நல்ல சமிக்ஞை

கடந்த 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை, அமெரிக்காவில் புற்றுநோய் பாதிப்புகளால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை வருடத்துக்கு 2.1 சதவீதம் என்ற ரீதியில் குறைந்து வருகிறது. அமெரிக்கர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்த நுரையீரல் புற்றுநோயும், தோல் புற்றுநோயும் ஆண்டுக்கு 5 சதவீதம் வரை குறைந்து வருவது தெரியவந்துள்ளது. பாலினம், வயது, இனம் என அனைத்து பிரிவு மக்களிடமும் புற்றுநோய் கணிசமாக குறைந்துள்ளது. 'கேன்சர்' என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி என்றும், அடுத்து வரும் ஆண்டுகளில் அமெரிக்காவில் புற்றுநோய் எண்ணிக்கை நன்றாக குறைந்து விடும் என்பதற்கான நம்பிக்கையை இது தருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+