அமெரிக்கர்களை பதறவிடும் பிரம்மாண்ட முருகன் சிலை.. கரோலினாவில் கட்டப்படும் கோவிலால் பரபரப்பு!
நியூயார்க்: அமெரிக்காவின் கரோலினாவில் மிகப்பிரம்மாண்டமாக முருகன் கோவில் கட்டப்படுவது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சமூக ஊடகங்களில் இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்காவில் கடுமையான வெறுப்பு பதிவு செய்யப்படும் நிலையில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பின் புதிய இலக்காக இந்த கோவில் மாறியுள்ளது.
டெக்சாஸ் ஹனுமான் சிலை மற்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குப் பிறகு, கரோலினாவில் கட்டப்பட்டு வரும் முருகன் கோவில் இப்போது புயலை கிளப்பி உள்ளது. 2018 இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் கோவில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. உலகின் மிக உயரமான முருகன் சிலை இங்கே அமைக்கப்பட உள்ளது. அதேபோல் ஒரு தமிழ்க் கலாச்சார அருங்காட்சியகம் மற்றும் ஒரு தமிழ் நூலகம் ஆகியவை இடம்பெறும்.

அமெரிக்காவில் முருகன் கோவில்
பத்திரிகையாளர் ஸ்டீபன் ஹார்ன் இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில், கோவில் இன்னும் முழுமையாக கட்டப்படாமல் இருந்தாலும், கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான அமைப்பு ஒன்று நிதி திரட்டி வருகிறது. தனியார் நிலத்தில் இதை கட்டுகிறார்கள். வட கரோலினாவின் மோன்கூர் என்ற நகரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்துக்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். தமிழர்கள் தங்கள் "போர்க்கடவுளான" முருகனின் உலகின் மிகப்பெரிய சிலையை இங்கே உருவாக்க திட்டமிட்டுள்ளனர், இது லிபர்ட்டி சிலையை விட உயரமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். அவரின் இந்த போஸ்ட்தான் இப்போது வைரலாகி உள்ளது.

இந்தியர்கள் மீது கடும் வெறுப்பு
ஏற்கனவே டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் இந்தியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. டிரம்ப் ஆதரவாளர்கள் தீவிர வலதுசாரிகள். அவர்களுக்கு அமெரிக்கர்கள் - வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமே முதல். மற்ற நாட்டினர் யாரையும் அவர்கள் மதிக்க மாட்டார்கள். இத்தனை காலம் டிரம்ப் ஆதரவாளர்களின் எதிர்ப்பாக கறுப்பின அமெரிக்கர்கள் இருந்தனர். இப்போது அதே வெள்ளை அமெரிக்கர்கள் இந்தியர்களை எதிர்க்க தொடங்கி உள்ளனர்.

இந்தியர்களுக்கு எதிராக வெள்ளையின அமெரிக்கர்கள் திரும்ப தொடங்கி உள்ளனர். இந்தியர்கள் தங்கள் வேலைகளை எடுத்துக்கொள்கிறார்கள், முக்கிய பொறுப்புகளுக்கு இந்தியர்கள் வருகிறார்கள் என்று வெள்ளையின அமெரிக்கர்கள் வாதம் வைக்கின்றனர். இதை அவர்கள் விரும்புவது இல்லை.
2023 நிதியாண்டில் அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களில் 72.3% இந்தியர்கள் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அங்கே இந்தியர்கள் இதனால் மேலும் குடியேறுவார்கள் என்ற அச்சம் உள்ளது. இதை வெள்ளையின அமெரிக்கர்கள் எதிர்க்கின்றனர். இந்தியர்கள் அமெரிக்கா வந்து அமெரிக்காவின் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள். சொந்த நாட்டில் ஜாதி, மத பிரிவினைகளை ஏற்படுத்தி மக்களை பிரச்சனையில் தள்ளிவிட்டு சொகுசாக அமெரிக்காவில் சிலர் குடியேறிவிடுகிறார்கள். ஆனால் அமெரிக்காவிற்கும் அவர்கள் நேர்மையாக இருப்பது இல்லை என்று வெள்ளையின அமெரிக்கர்கள் இந்தியர்கள் மீது வெறுப்பை உமிழ தொடங்கி உள்ளனர்.

இந்தியர்கள் கட்டும் கோவிலுக்கு எதிர்ப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவின் கரோலினாவில் மிகப்பிரம்மாண்டமான முருகன் கோவில் கட்டப்படுவது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சமூக ஊடகங்களில் இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்காவில் கடுமையான வெறுப்பு பதிவு செய்யப்படும் நிலையில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பின் புதிய இலக்காக இந்த கோவில் மாறியுள்ளது.

இந்த கோவில் எப்படி இங்கே கட்டப்படலாம்.. அதுவும் திறந்த வெளியில் உயரமாக எல்லோரும் பார்க்கும் வகையில் எப்படி இந்த கோவிலை கட்டலாம்.. எப்படி அவ்வளவு பெரிய சிலையை அவர்கள் வெளியே வைக்கலாம்.. அமெரிக்கா எங்கே செல்கிறது என்று அமெரிக்கர்கள் பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர். அமெரிக்கா உருவாக்கப்பட்ட போது இந்த நோக்கத்தோடு உருவாக்கப்படவில்லை.. ஆனால் இப்போது பாருங்கள் நிலைமை மோசமாகிவிட்டது.. நம்முடைய கொள்கைகள் தவறு என்பதை இது காட்டுகிறது என்று அமெரிக்கர்கள் பலர் குறிப்பிட்டு உள்ளனர்.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications