பூமிக்கு மிக நெருக்கமாக வரும் விண்கல்! மோதினால் 7 லட்சம் மக்கள் சாம்பல்! ஆனால்.. நாசா சொல்லும் சேதி!
நியூயார்க்: சமீப காலமாக விண்கற்கள் குறித்த அச்சங்கள் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் '2022 TN 1' எனும் பெயர் கொண்ட விண்கல் ஒன்று பூமிக்கு மிக நெருக்கமாக வரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வுதான் இன்று பூமிக்கு அருகே சிறுகோள் ஒன்று கடந்து செல்ல இருப்பதை கண்டு பிடித்திருக்கிறது.
'2022 TN 1' எனும் பெயர் கொண்ட 1029 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று நாளை பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது. இது பூமியிலிருந்து சுமார் 71 லட்சம் கி.மீ தூரத்தில் பூமியை கடக்கிறது. இந்த தொலைவு மிக நீண்டதாக தெரியலாம். ஆனால் விண்வெளியை பொறுத்த அளவில் இது மிகக் குறைவான தூரம்தான். பூமியிலிருந்து செவ்வாய்க்கு 5.4 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. அப்படியெனில் 71 லட்சம் கி.மீ என்பது பூமிக்கு மிக நெருக்கம்.
நிலவுடன் ஒப்பிடும்போது, பூமிக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 19 மடங்கு தூரத்தில் இந்த விண்கல் கடந்து செல்கிறது. 63,828 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த விண்கல், அதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆனால், தற்போது இப்படியான ஆபத்து எதுவும் இல்லை என நாசா கூறுகிறது.
ஒருவேளை இது பூமியை தாக்கினால், இந்த விண்கல் விழுந்த இடத்தில் 580 ஆழமும் 9.7 கி.மீ அகலமும் கொண்ட பள்ளம் உருவாகும். இந்த விபத்தின்போது சுமார் 7 லட்சம் மக்கள் உடனடியாக சாம்பலாகிவிடுவார்கள். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 15 கி.மீ சுற்றளவில் வெறும் நெருப்பு மட்டும் தான் இருக்கும். இதன் அனல் காரணமாக 150 கி.மீ பரப்பளவில் உள்ள மரங்கள் அனைத்தும் எரிய தொடங்கிவிடும். மனித உயிர் பலி 1.3 கோடி மக்கள் மொத்தமாக இதனால் உயிரிழப்பார்கள். 90 லட்சம் மக்களுக்கு தீக்காயம் ஏற்படும்.
100 கி.மீ சுற்றளவில் எந்த கட்டிடங்களும் இருக்காது. 240 கி.மீ சுற்றளவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும். 241 டெசிபல் அளவுக்கு ஒலியை உருவாக்கும். இது மனிதனை உடனே கொன்றுவிடும். ஆனால் நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நாளை நடக்காது.
1.6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதில்தான் டைனோசர்கள் அழிந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications