புதிராக உள்ளது.. Pandemic பற்றி முன்பே எச்சரித்த பில்கேட்ஸ்- இப்போது ஓமிக்ரான் பற்றி பெரிய வார்னிங்!
நியூயார்க்: ஓமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது, வரலாற்றில் இப்படி ஒரு வைரஸ் பரவியதே இல்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக கோடிஸ்வரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகில் கொரோனா பரவும் முன்பே அதை பற்றி எச்சரிக்கை விடுத்தவர்தான் பில்கேட்ஸ். 2015லேயே நிகழ்ச்சி ஒன்றில் நாம் எபோலா என்ற பெரிய வைரஸில் இருந்து தப்பிவிட்டோம். ஆனால் எப்போதும் இப்படி தப்பிக்க முடியாது. வரும் நாட்களில் பெரிய வைரஸ் வரலாம்.
அது உலகம் முழுக்க பரவலாம். ஏன் உருமாற்றம் கூட அடையலாம். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் பெருந்தொற்றுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டு இருந்தார். அவர் சொன்னபடியே 2019 இறுதியில் கொரோனா பெருந்தொற்று வந்தது.

ஓமிக்ரான் பில்கேட்ஸ்
இந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் குறித்து அவர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்று நினைக்கும்போதுதான் இந்த பெருந்தொற்றின் மிக மோசமான பகுதிக்கு நாம் வந்து இருக்கிறோம். ஓமிக்ரான் நம்முடைய வீடுகளை தாக்க போகிறது. என்னுடைய நெருங்கிய நண்பருக்கு ஓமிக்ரான் உள்ளது. நான் என்னுடைய பல விடுமுறை திட்டங்களை ரத்து செய்துவிட்டேன்.

ஓமிக்ரான் வைரஸ்
ஓமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது. வரலாற்றில் இப்படி ஒரு வைரஸ் பரவியதே இல்லை. இன்னும் சில நாட்களில் இந்த வைரஸ் உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இருக்கும். இந்த ஓமிக்ரான் உங்களை எவ்வளவு பாதிக்கும் என்பதுதான் புதிராக உள்ளது. நாம் இதை மிக மிக சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

டெல்டா பில்கேட்ஸ்
டெல்டாவில் பாதி அளவிற்கு இது வீரியம் கொண்டு இருந்தாலும் ஆபத்துதான். ஏனென்றால் இது மிக வேகமாக பரவுகிறது. கொஞ்சம் வீரியம் கூடுதலாக இருந்தாலும் ஆபத்துதான். அதே சமயம் நாம் எல்லோரும் நமக்கு அருகில் இருக்கும் நபர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்களை எப்படியாவது நாம் கண்காணிக்க வேண்டும் .

பில்கேட்ஸ் எச்சரிக்கை
மாஸ்க் அணிய வேண்டும், வெளியே செல்வதை குறைக்க வேண்டும், உட்புற கூட்டங்களை குறைக்க வேண்டும். வேக்சின் போட வேண்டும். பூஸ்டர் போடுவது சிறந்த தடுப்பை கொடுக்கும். வேக்சின் போட்ட சிலருக்கும் ஓமிக்ரான் கொரோனா வருகிறது. இது கொஞ்சம் கவலை அளிக்கிறது. ஆனால் அதே சமயம் எத்தனை பேருக்கு இது பரவுகிறது அதில் எத்தனை பேர் வேக்சின் போட்டவர்களை என்பதை பார்க்க வேண்டும்.

அடுத்த அலை
மக்கள் கொரோனாவால் பலியாவதை தடுக்க வேக்சின் உதவும். அதேபோல் அவர்களின் உடல்நிலை மோசமாவதை தடுக்கவும் வேக்சின் உதவும். இதில் ஒரே நல்ல விஷயம் இருக்கிறது. ஓமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது. இதனால் விரைவில் இது ஆதிக்கம் மிக்க கொரோனாவாக மாறும். அப்படி மாறினால் அதன்பின் அலை ஏற்படும். அலை ஏற்பட்டால் அது 3 மாதங்கள் மட்டுமே நீடிக்கும்.
Recommended Video

ஓமிக்ரான் கொரோனா பரவல்
இதனால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டாலும். அந்த 3 மாதங்களுக்கு பின் பெருந்தொற்று முடிவிற்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் என்னுடைய கருத்துப்படி 2022ல் கொரோனா பெருந்தொற்று மொத்தமாக முடிவிற்கு வரும். இன்னொரு விடுமுறை காலத்தில் இப்படி கொரோனா பரவுவது எனக்கும் கடினமாகவே இருக்கிறது. ஆனால் எப்போதும் இது இப்படியே நீடிக்காது. சில காலத்தில் இந்த பெருந்தொற்று முடிவிற்கு வரும். நாம் எல்லோரும் நம்மை அதுவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications