டிரேட் ஒப்பந்தத்தை நீக்குவேன்.. கடுமையாக செயல்படுவேன்.. சீனாவை நெருக்கும் டிரம்ப்.. தில்லான பேட்டி!

கொரோனா தாக்குதலை பயன்படுத்தி சீனா வர்த்தக ஒப்பந்தத்தை மீறினால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கொரோனா தாக்குதலை பயன்படுத்தி சீனா வர்த்தக ஒப்பந்தத்தை மீறினால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    டிரம்ப்புக்கு எதிராக போர்கொடி பிடிக்கும் அமெரிக்க மக்கள்

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வந்தார். முக்கியமாக சீனா மீது டிரம்ப் கோபத்தில் இருந்தார். அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த இரண்டு வருடமாக நடந்த வர்த்தக போர் சென்று வருட இறுதியில்தான் முடிந்தது.

    இப்போது கொரோனா காரணமாக சீனா மீது டிரம்பிற்கு கோபம் அதிகம் ஆகியுள்ளது. கொரோனா காரணமாக சீனா மீது கோபத்தில் இருக்கும் டிரம்ப், தற்போது சீனாவை பொருளாதார ரீதியாக முடக்க யோசித்து வருகிறார். சென்ற வருடம் நடந்த வர்த்தக போரின் தொடர்ச்சியாக அவரின் புதிய பேட்டி பார்க்கப்படுகிறது.

    சீனாவுடன் சண்டை

    சீனாவுடன் சண்டை

    சென்ற வருடம் பேட்டி அளித்த டிரம்ப், உலகில் இருக்கும் எல்லா நாடுகளும் அமெரிக்க பொருட்கள் மீது குறைவான வரியை விதிக்கிறது. ஆனால் சீனா வரியை குறைக்க கொஞ்சம் கூட தயாராக இல்லை. சீனா மோசமாக நடக்கிறது என்று டிரம்ப் கூறி இருந்தார். டிரம்பின் குற்றச்சாட்டு ஒன்றுதான், அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் 25% வரி விதிக்கப்படுகிறது. இதை டிரம்ப் கடுமையாக குற்றஞ்சாட்டி வந்தார். இதனால் சீனா மீது வர்த்தக போரை அவர் தொடங்கினார்.

    என்ன வர்த்தக போர்

    என்ன வர்த்தக போர்

    இந்த வர்த்தக போரில் சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவின் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க திட்டமிட்டது. இந்த சண்டை இரண்டு வருடம் நடந்தது.

    கடைசியில் நடந்த பேச்சுவார்த்தையின் படி அமெரிக்காவின் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்க சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு கைமாறாக சீனாவின் பொருட்கள் மீது அமெரிக்கா தனது வரியை குறைக்கும் என்றது. இதனால் இரண்டு நாடுகளின் சண்டை முடிந்தது.

    சீனா திட்டம்

    சீனா திட்டம்

    இந்த சண்டை முடிவிற்கு வந்த போது இரண்டு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம், சீனா அமெரிக்காவின் பொருட்களை வாங்கும். ஆனால் சீனாவில் பேரிடர் ஏற்பட்டு பொருளாதாரம் மோசமாக மாறினால், அமெரிக்காவின் பொருட்களை வாங்க முடியாது என்று ஒரு வரி குறிப்பிடப்பட்டு இருந்தது . அதாவது பொருளாதார இழப்பை சமாளிக்க இறக்குமதியை நிறுத்துவோம் என்று சீனா ஒப்பந்தத்தில் கூறியது.

    கொரோனா திட்டம்

    கொரோனா திட்டம்

    இந்த நிலையில் கொரோனாவை பயன்படுத்தி இந்த சலுகையை பெற சீனா திட்டமிட்டு வருகிறது. அதாவது கொரோனா காரணமாக எங்களின் பொருளாதாரம் மோசமாகி உள்ளது. அதனால் வர்த்தக ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவின் பொருட்களை வாங்க முடியாது என்று சீனா கூற திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவை இதை பயன்படுத்தி ஏமாற்ற சீனா யோசித்து வருவதாக அமெரிக்க ஊடங்கங்கள் கூறுகிறது.

    டிரம்ப் கருத்து

    டிரம்ப் கருத்து

    இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா எங்களுடன் செய்து இருக்கும் ஒப்பந்தத்தை மீறி அவசர அறிவிப்பு எதையாவது வெளியிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்கும். உடனே நாங்கள ஒப்பந்தத்தை நீக்க வேண்டி வரும். நான் இந்த விஷயத்தில் மற்ற எல்லோரையும் விட மிக மோசமாக செயல்படுவேன் என்பதை சீனா தெரிந்து கொள்ள வேண்டும்.

    கடுமையான செயல்

    கடுமையான செயல்

    சீனாவிற்கு எதிராக அமெரிக்காவில் என்னை விட கடுமையாக செயல்பட்ட நபர்கள் யாரும் இருக்க முடியாது. சீனா அமெரிக்காவை பொருளாதார ரீதியாக நசுக்கி வந்தது. நான் அதிபர் ஆகும் வரை அப்படித்தான் இருந்தது. 200-500 பில்லியன் வரை எல்லா வருடமும் ஏமாற்றி வந்தது. ஆனால் நான் வந்த பின் அதை மாற்றினேன். இப்போது சீனாவுடன் வர்த்தகம் சரியாகி வருகிறது.

    ரத்து செய்வேன்

    ரத்து செய்வேன்

    சீனா மீண்டும் அதேபோல் செய்ய நினைத்தால் சீனாவுடன் மொத்தமாக வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டு நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன். தற்போது நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டும்தான் பிரச்சனை மற்ற எல்லாம் எப்போதும் போல சிறப்பாக நடக்கிறது, என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சீனா மீது பொருளாதார தடை விதிக்க சில நாடுகள் யோசித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+