நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் பயோ ஆயுதம் இல்லை.. ஆனால்.. அமெரிக்க உளவுத்துறை முக்கிய அறிவிப்பு.. புது பிளான்!

கொரோனா வைரஸ் பயோ ஆயுதம் கிடையாது, ஆனால் இது குறித்து முக்கிய சில சோதனைகளை, விசாரணைகளை செய்ய இருக்கிறோம் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் பயோ ஆயுதம் கிடையாது, ஆனால் இது குறித்து முக்கிய சில சோதனைகளை, விசாரணைகளை செய்ய இருக்கிறோம் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Recommended Video

    Coronavirus Is Not Man Made - US Intelligence

    கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து கசிந்து இருக்கலாம் என்று அமெரிக்கா நம்புகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து புகார்கள் வைத்து வருகிறார். சீனா இது தொடர்பான உண்மைகளை மறைக்கிறது என்று டிரம்ப் கூறி வருகிறார்.

    அதேபோல் சீனாவில் இருக்கும் வுஹன் ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு பரப்பப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    எப்படி வெளியானது

    எப்படி வெளியானது

    இந்த நிலையில் இந்த வைரஸ் எப்படி வெளியானது என்பது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை தற்போது முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், கொரோனா வைரஸ் பயோ ஆயுதம் கிடையாது. இதை செயற்கையாக மனிதர்கள் உருவாக்கவில்லை . அதேபோல் இதை மரபணு ரீதியாக மாற்றவும் இல்லை. அதனால் இது தொடர்பான சந்தேகங்களை நாம் களைய வேண்டும்.

    சந்தேகம்

    சந்தேகம்

    ஆனால் இது குறித்து முக்கிய சில சோதனைகளை, விசாரணைகளை செய்ய இருக்கிறோம். இந்த வைரஸ் எப்படி முதல் முதலில் மனிதர்களை தாக்கியது என்று நாங்கள் விசாரித்து வருகிறோம். இல்லையென்றால் இந்த வைரஸ் வுஹன் வைராலஜி ஆராய்சசி மையத்தில் இருந்து கசிந்ததா சென்று ஆராய்ச்சி செய்து வருகிறோம். இது தொடர்பாக தொடர் விசாரணைகளை நடத்துவோம், என்று குறிப்பிட்டுள்ளனர்.

    உளவு விசாரணை

    உளவு விசாரணை

    சீனாவில் கடந்த சில தினங்களாக அமெரிக்காவின் உளவுத்துறை தீவிரமாக ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. கொரோனா வைரஸ் எங்கிருந்து கசிந்து இருக்கலாம் என்பது தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. சீன அரசிடம் அனுமதி வாங்காமல் தனியாக நடத்தப்படும் உளவு விசாரணை ஆகும். இதன் முதல்கட்ட அறிக்கைதான் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பான கூடுதல் விசாரணை மேலும் நடக்கும் என்கிறார்கள்.

    சீனா மறைத்ததா?

    சீனா மறைத்ததா?

    இது மட்டுமின்றி இன்னும் சில விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்க உளவுத்துறை முடிவு செய்துள்ளது . கொரோனா வைரஸ் பரவலை சீனா வேண்டும் என்றே மறைத்ததா என்று விசாரணை செய்து வருகிறார்கள். அதாவது மற்ற நாடுகளுக்கு பரவட்டும். அதனால் பிரச்சனை இல்லை. இதன் மூலம் ஆதாயம் அடையலாம் என்று சீனா வேண்டும் என்றே உண்மைகளை மறைத்ததா என்று விசாரணை செய்து வருகிறார்கள்.

    English summary
    Coronavirus is not man-made or genetically changed says US Intelligence after President Trump's attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X