நியூயார்க்கில் அடுத்தடுத்த சம்பவங்கள்.. உலகின் 'நம்பர் 1' மாகாணத்தை உலுக்கிய கொரோனா.. என்ன நடந்தது?

அமெரிக்காவின் முன்னணி மாகாணமான நியூயார்க் அங்கு கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் முன்னணி மாகாணமான நியூயார்க் அங்கு கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    பிணங்களை புதைக்க பார்க்குகளை கல்லறைகளாக மாற்ற அமெரிக்கா முடிவு?

    உலகின் மிக முக்கியமான மாகாணம்.. ஹாலிவுட் படங்களில் பல உலக அழிவை தனியாக தடுத்து நிறுத்திய நகரம்.. உலகின் மையம் இதுதான் என்று அமெரிக்கா நினைக்கும் நகரம்.. பொருளாதார ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் மாகாணம்தான் நியூயார்க்!

    ஆனால் இத்தனை சிறப்புகள் கொண்ட அதே நியூயார்க் மாகாணம்தான் தற்போது உலகிலேயே கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உருவெடுத்து இருக்கிறது. ஆம் உலகிலேயே சீனா, இத்தாலியை விட அமெரிக்காவில் இருக்கும் ஒரு மாகாணமான நியூயார்க்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தலைமை மாகாணம்

    தலைமை மாகாணம்

    அமெரிக்காவின் தலைமை மாகாணமான வாஷிங்டனில்தான் முதலில் கொரோனா ஏற்பட்டது. ஆனால் அப்போது யாரும் நியூயார்க் இந்த கொரோனா வைரஸ் மூலம் பாதிக்குமா என்று நினைக்கவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த நம்பிக்கையால் நியூயார்க்கில் யாரும் கொரோனா வைரஸ் குறித்து கவலை அடையவில்லை. அங்கு மார்ச் பாதி வரை நியூயார்க்கில் கொரோனா தீவிரம் அடையவே இல்லை. ஆனால் போக போகத்தான் கொரோனா தீவிரம் அடைய தொடங்கியது

    தீவிரம்

    தீவிரம்

    மார்ச் 1ம் தேதிதான் நியூயார்க்கில் முதல் நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் மாத இறுதிக்குள் அங்கு 80 ஆயிரம் பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்கள். ஆம் ஒரே மாதத்தில் அங்கு 80 ஆயிரம் பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதிலும் முக்கியமாக மார்ச் 16ம் தேதி அங்கு 5600 பேருக்குத்தான் கொரோனா இருந்தது. ஆனால் 4 நாட்களில் இதன் வேகம் அதிகரித்து மார்ச் 20ம் தேதி 16,600 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

    துரிதமான பரவல்

    துரிதமான பரவல்

    அதன்பின் மார்ச் 25ம் தேதி 62800 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மாத இறுதியில் அங்கு 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் இதைவிட மோசமான நாட்கள் அதன்பின்தான் வந்தது. ஆம் அதன்பின் இரண்டு மிக மோசமான வாரங்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை தாக்கியது. ஏப்ரல் முதல் வாரம் மட்டும் அங்கு 48 ஆயிரம் பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்கள்.

    தீவிரமாக பாதிக்கப்பட்டனர்

    தீவிரமாக பாதிக்கப்பட்டனர்

    அதன்பின் ஏப்ரல் இரண்டாம் வாரம் மொத்தம் 52 ஆயிரம் பேர் கொரோனா காரணமாக தீவிரமாக பாதிக்கப்பட்டனர். மொத்தம் 1 லட்சம் பேர் வெறும் இரண்டு வாரத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். உலகிலேயே எங்கும் யாரும் இந்த அளவிற்கு இரண்டு வாரத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்படவில்லை. கொரோனா காரணமாக தற்போது வரை நியூயார்க்கில் மொத்தம் 189,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9385 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    உலகின் முன்னணி மாகாணமான நியூயார்க் இப்படி கொரோனாவிடம் தோல்வி அடைந்ததற்கு 5 காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம், அங்கு மிக அதிகமான மக்கள் தொகை உள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் 86 லட்சம் பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகம் கிடையாது . ஆனால் சதுர கிலோமீட்டர் தூரத்தை கணக்கில் கொண்டால் இது அதிகம். அதாவது அங்கு ஒரு சதுர கிலோ மீட்டர் பகுதியில் 10 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.

    பெரிய பலன் இல்லை

    பெரிய பலன் இல்லை

    இதனால் மக்களை தனி மனித இடைவெளியை கடைபிடிக்க சொன்னால் கூட பெரிய அளவில் பலன் அளிக்காது. அதற்கு அடுத்து அங்கு பிப்ரவரி இறுதி வரை பல லட்சக்கணக்கில் மக்கள் சுற்றுலா வந்து இருக்கிறார்கள். ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் பேர் வரை நியூயார்க் சுற்றுலா வந்துள்ளதாக கணக்கு கூறுகிறது. இவர்களில் பலர் சோதனை செய்யப்படாமல் நியூயார்க் உள்ளே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மூலமும் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    மோசமான வறுமை

    மோசமான வறுமை

    இன்னொரு பக்கம் நியூயார்க்கில் யாருக்கும் வெளியே தெரியாமல் இருக்கும் வறுமை. நியூயார்க் எந்த அளவு பணக்காரர்களை கொண்டு இருக்கிறதோ அதே அளவிற்கு ஏழைகளையும் கொண்டு உள்ளது. நியூயார்க்கின் ஒரு பகுதி ஏழைகளும், வீடு இல்லாதவர்களும் நிரம்பி இருக்கிறார்கள். மிக பெரிய பொருளாதார சமநிலையற்ற தன்மை அங்கு நிலவி வருகிறது. முக்கியமான ப்ரோன்ஸ் மற்றும் க்யூன்ஸ் ஆகிய பகுதிகளில் அதிக ஏழைகள் வீடு இன்றி வெளியே வசிக்கிறார்கள்.

    மிக தாமதம்

    மிக தாமதம்

    இவர்களில்தான் பலருக்கும் கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு மார்ச் 8ம் தேதி பெரிய அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மருத்துவர்கள் யாரும் அங்கு களமிறங்கி பணிகளை செய்யவில்லை. ஏன் அங்கு சரியாக காண்டாக்ட் டிரேஸ் செய்யப்படவில்லை. இதுவும் கொரோனா தீவிரம் அடைய காரணம் ஆகும். இந்த தாமதம் மற்றும் தாமதமான திட்டமிடல் ஆகியவையும் இதற்கு காரணம் ஆகும்.

    மருத்துவ வசதி

    மருத்துவ வசதி

    கடைசியாக அங்கு மருத்துவத்துறை மிக மோசமான நிலையில் உள்ளது. மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. போதுமான மருந்துகள் இல்லை. வெண்டிலேட்டர் மற்றும் மாஸ்குகள் பெரிய அளவில் இல்லை. இதனால் அங்கு கொரோனா சிகிச்சை அளிப்பது சிரமமான காரியமாக மாறியுள்ளது. இந்த 5 விஷயங்கள்தான் கொரோனாவிடம் நியூயார்க் தோல்வி அடைய முக்கிய காரணம் என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+