நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது நல்லதற்கல்ல.. வேக்சின் போட்டாலும் ஓமிக்ரானிடம் தப்பிப்பது கஷ்டம்.. மாடர்னா சிஇஓ தரும் வார்னிங்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வேக்சின்களின் எதிர்ப்பு சக்தி ஓமிக்ரான் கொரோனாவிற்கு எதிராக குறைவாக இருக்கும் என்று மாடர்னா மருந்து நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் பேன்கெல் தெரிவித்துள்ளார்.

ஓமிக்ரான் கொரோனா மீதான அச்சம் உலகம் முழுக்க நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் கொரோனா வைரஸை கவலை அளிக்க கூடிய வைரஸ் வகையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. பல நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

 கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்! கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

உலகம் முழுக்க தற்போது 200க்கும் அதிகமான நபர்களுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
டெல்டாவை விட இது அதிக ஆபத்து கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமிக்ரான்

ஓமிக்ரான்

இந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக மார்க்கெட் மொத்தமும் ஆடிப்போய் உள்ளது. ஓமிக்ரான் குறித்த அறிவிப்பு வெளியான போதே மார்க்கெட்டில் பெரிய சரிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் விலை தொடங்கி அமெரிக்கா, ஆஸ்திரேலியா மார்க்கெட் என்று பல நாடுகளின் மார்க்கெட் பெரிய சரிவை சரிந்தது. இன்றும் காலையில் பல நாடுகளின் மார்க்கெட் சரிவோடுதான் தொடங்கியது.

மாடர்னா

மாடர்னா

இந்த நிலையில் மாடர்னா மருந்து நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் பேன்கெல் அதிர்ச்சி அளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி, வேக்சின் போட்டாலும் ஓமிக்ரானிடம் தப்பிப்பது கஷ்டம். ஏனென்றால் ஓமிக்ரான் கொரோனாவிற்கு எதிராக வேக்சின் அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. டெல்டாவிற்கு எதிராக வேக்சின்கள் நல்ல எதிர்ப்பு சக்தி கொண்டு இருந்தது.

சந்தேகம்

சந்தேகம்

அதே எதிர்ப்பு சக்தி ஓமிக்ரான் வகை கொரோனாவிற்கு எதிராக இருக்கும் என்று சொல்லவே முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. வேக்சின்களின் எதிர்ப்பு சக்தி பெரிய அளவில் சரிவை சந்திக்க போகிறது. வேக்சின்களின் எதிர்ப்பு சக்தி எவ்வளவு சரிவை சந்திக்கும் என்பது முழுமையான டேட்டா வந்த பின் தெரிந்துவிடும்.

Recommended Video

    Omicron Symptoms என்ன? | உருமாறிய புதிய Corona Variant | Oneindia Tamil
    வாய்ப்பே இல்லை

    வாய்ப்பே இல்லை

    நான் இதுவரை பேசிய ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் இது நல்ல விஷயம் கிடையாது. இது நல்லதற்கல்ல என்றுதான் குறிப்பிட்டுள்ளனர், என்று மாடர்னா மருந்து நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் பேன்கெல் தெரிவித்துள்ளார். மாடர்னா நிறுவனத்தின் மாடர்னா எம்ஆர்என் வேக்சின் அமெரிக்காவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வேக்சின் ஆகும். ஆனால் அப்படி ஒரு நிறுவனத்தின் சிஇஓவே இப்படி சொல்வது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    ஓமிக்ரான் கொரோனாவில் 50 உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. 32 இடங்களில் புரோட்டின் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக எம்ஆர்என் வேக்சின்கள் பெரும்பாலும் ஓமிக்ரான் கொரோனாவிற்கு எதிராக அதிக எதிர்ப்பு ஆற்றல் கொண்டு இருக்காது என்றே கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ஓமிக்ரான் கொரோனாவிற்கு எதிராக வேக்சின்கள் எதுவும் அதிக எதிர்ப்பு ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று சொல்ல முடியாது என்று மாடர்னா சிஇஓ தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus Omicron Mutant: Moderna CEO says vaccines will be less effective against new variant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X