Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓமிக்ரான் கொரோனா.. தென்னாப்பிரிக்க எக்ஸ்பர்ட்ஸ் தரும் புதிய எச்சரிக்கை.. கவனமாக இருக்க வேண்டும்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஓமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து தென்னாபிரிக்க அரசின் மருத்துவர் குழு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கடந்த மாதம் 25ம் தேதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வகை கொரோனா பரவி வருகிறது. ஓமிக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் ஆற்றல் கொண்டதால் இதை கவலை அளிக்க கூடிய வகையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இப்போது உலகம் முழுக்க 15க்கும் அதிகமான நாடுகளில் இந்த ஓமிக்ரான் பரவி உள்ளது. ஆனால் இதுவரை பெரிய அளவில் ஓமிக்ரான் காரணமாக மரணங்கள் ஏற்படவில்லை.

ஓமிக்ரான்

ஓமிக்ரான்

முதல் கட்ட தகவல்களின்படி ஓமிக்ரான் கொரோனா நிறைய பேரிடம் பரவினாலும் கூட இதனால் மோசமான பாதிப்புகள் ஏற்படவில்லை. தென்னாபிரிக்க மருத்துவர்கள் பலர் தெரிவித்த தகவலின்படி, ஓமிக்ரான் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட எல்லோருமே மைல்ட் கேஸ்கள்தான். அதாவது இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது இல்லை. வீட்டில் இருந்தபடியே இவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது.

மைல்ட் கேஸ்கள்

மைல்ட் கேஸ்கள்

இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இப்போது லேசான பாதிப்பே ஏற்படுகிறது. பலருக்கு வாசனை, சுவை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படவில்லை. வேகமாக பரவினாலும் ஓமிக்ரான் ஆபத்து கொண்டதாக இல்லை என்று ஓமிக்ரான் குறித்து தென்னாபிரிக்க மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதனால் டெல்டா அளவிற்கு ஓமிக்ரான் பாதிப்பு கொண்டதாக இருக்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

ஆபத்து இல்லை

ஆபத்து இல்லை

இந்த நிலையில்தான் தென்னாபிரிக்க மருத்துவர்கள் குழு நேற்று அந்நாட்டு சுகாதாரத்துறைக்கு அளித்த விளக்கத்தில் ஓமிக்ரான் கொரோனா குறித்த புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மருத்துவர் மிட்சல் குரூம் தலைமையிலான அந்நாட்டு தலைமை மருத்துவ குழு சுகாதாரத்துறைக்கு அளித்த விளக்கத்தில், ஓமிக்ரான் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது என்று இப்போதே சொல்ல முடியாது.

ஆபத்து இனிதான்

ஆபத்து இனிதான்

மைல்ட் கேஸ்களைத்தான் ஏற்படுத்துகிறது என்று இப்போதே சொல்லிவிட முடியாது. இப்போதுதான் இந்த ஓமிக்ரான் பரவ தொடங்கி உள்ளது. இனிதான் அது எவ்வளவு பாதிப்பு கொண்டது என்பது தெரியும். ஓமிக்ரான் கொரோனா இப்போது இளைஞர்கள் இடையில்தான் பரவுகிறது. அதில் சிலர் ஏற்கனவே வேக்சின் போட்டவர்கள். இதனால் கேஸ்கள் மைல்ட்டாகவே இருக்கும்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

ஆனால் போக போக வயதானவர்களுக்கு இது பரவும். அப்போதுதான் இதன் உண்மையான வீரியம் தெரிய வரும். இளைஞர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம். இப்போது 30 வயதுக்கு குறைவான பலர் ஓமிக்ரான் மூலம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரிய அளவில் அறிகுறிகளை காட்ட மாட்டார்கள். அவர்கள் மூலம் வயதானவர்களுக்கு ஓமிக்ரான் செல்லும் போதுதான் உண்மையான பாதிப்பு தெரிய வரும்.

வயதானவர்கள்

வயதானவர்கள்

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வயதானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களிடம்தான் உண்மையில் ஓமிக்ரான் எவ்வளவு வீரியம் கொண்டது என்று தெரியும். இது அதிக ஆபத்தை ஏற்படுத்தாது என்று இப்போதே சொல்லிவிட முடியாது, என்று அந்நாட்டு மருத்துவர்கள் அரசுக்கு அளித்த விளக்கத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    டெல்டா

    டெல்டா

    வேகமாக பரவினாலும் டெல்டா அளவிற்கு ஓமிக்ரான் ஆபத்து கொண்டதாக இருக்காது என்ற வாதத்திற்கு எதிராக மருத்துவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். ஏற்கனவே இதில் 50 உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதில் 32 உருமாற்றங்கள் ஸ்பைக் புரோட்டின் தொடர்பானது. இந்த நிலையில்தான் தென்னாப்பிரிக்க மருத்துவர்களின் இந்த எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+