அணு ஆயுதத்தை விட பவர் புல்.. அமெரிக்காவின் கழுத்தை ஒரு இறுக்கு இறுக்கும் ஐரோப்பா.. எப்படி?
நியூயார்க்: அமெரிக்காவுடனான புதிய மோதல் காரணமாக ஐரோப்பா அதன் அமெரிக்க சொத்துக்களை விற்க நேரலாம். இது டாலர் மதிப்பு சரிவுக்கு வழிவகுக்கும் என்ற கவலை பரவலாக எழுந்துள்ளது. இப்போது கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா முயல்வதால், அமெரிக்கா - ஐரோப்பா இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த மோதல் காரணமாக அமெரிக்காவிற்கு ஐரோப்பா செக் வைக்க திட்டமிடலாம்.
இத்திட்டம் எளிதானது; ஆனால் அதன் விளைவுகள் தீவிரமானவை. அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், அமெரிக்காவிற்கு செக் வைக்கும் விதமாக ஐரோப்பா தனது அமெரிக்க சொத்துக்களை விற்கக்கூடும். இதில் அமெரிக்க அரசாங்கப் பத்திரங்கள், அமெரிக்க நிறுவனப் பங்குகளும் அடங்கும். இது பெரிய அளவில் நடந்தால், அமெரிக்க டாலர் பலவீனமடைந்து உலக நிதிச் சந்தைகளை சீர்குலைக்கலாம்.

அமெரிக்கா டாலர் பலவீனம் அடையும்
அதாவது அமெரிக்க சந்தையில் இருந்து ஐரோப்பா வெளியேறும். இதனால் டாலர் தேவை குறையும். டாலர் இருப்பு ஆனால் கூடும். இதனால் டாலர் மதிப்பு குறையும். டாலரின் அழிவாக கூட இது பார்க்கப்படுகிறது. அமெரிக்கா-ஐரோப்பா மோதல்கள் அதிகரித்த நிலையில் இந்த விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் சுங்கவரி மிரட்டல்கள், கிரீன்லாந்து உட்பட நேட்டோ விவகாரக் கருத்து வேறுபாடுகள் இதற்குக் காரணம். ஐரோப்பாவின் இந்த நிதி பலம் ஆயுதமாக்கப்படுமா என இப்போது முதலீட்டாளர்கள் சிந்திக்கின்றனர்.
ஐரோப்பா சுமார் $10 டிரில்லியன் மதிப்புள்ள அமெரிக்க சொத்துக்களை வைத்துள்ளது. இது அமெரிக்கப் பத்திரங்கள், பங்குகளின் மிகப்பெரிய வெளிநாட்டு உரிமையாளராகும். இந்தச் சொத்துக்களை விற்பதென்பது அமெரிக்கா எதிர்பார்க்காத அணு ஆயுதம் போல ஆகிவிடும்.
அதாவது இது அணு ஆயுதத்தை விட கடுமையான சேதங்களை ஏற்படுத்தலாம் என டாய்ச் வங்கியின் ஆலோசகர், நிபுணர் ஜார்ஜ் சரவெலோஸ் குறிப்பிடுகிறார். ஐரோப்பா விற்றால், அமெரிக்க கருவூல பத்திர வருவாய் உயர்ந்து, கடன் செலவுகள் அதிகரிக்கும். அமெரிக்கப் பங்குச் சந்தைகள் அழுத்தத்தைச் சந்திக்கும்; யூரோ டாலருக்கு எதிராக வலுப்பெறும்.
டாலர் சரியும்
ஆனால், இத்திட்டத்திற்கு சில முக்கிய வரம்புகள் உண்டு. ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான அமெரிக்க சொத்துக்கள் அரசாங்கங்களுக்குச் சொந்தமில்லை. அவை தனியார் முதலீட்டாளர்கள், ஓய்வூதிய நிதிகள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரியவை. இதனால், எல்லோரும் ஒரே நேரத்தில் விற்பனை செய்வது மிகவும் கடினம். உள்நாட்டு நிதிச் சேதம் இல்லாமல் விற்கும்படி இவர்களை அரசுகளால் கட்டாயப்படுத்த முடியாது.
அமெரிக்க சொத்துக்களை விற்பது ஐரோப்பாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பல முதலீடுகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதால், திடீர் விற்பனை பெரும் இழப்புகளை உண்டாக்கும். ஐரோப்பிய ஓய்வூதிய நிதிகள், வங்கிகள் பன்முனை முதலீடுகளை நம்பியுள்ளன; அமெரிக்க சந்தைகள் அவற்றின் முதலீட்டுப் பிரிவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு விதிமுறைகள், பிரிந்த உரிமை ஆகியவை பெரிய அளவிலான நடவடிக்கையை மேலும் சிக்கலாக்குகின்றன.
கடந்த ஆண்டு சில டேனிஷ் ஓய்வூதிய நிதிகள் டாலர் முதலீட்டைக் குறைத்தன. அமெரிக்கப் பங்குகள் பலவீனமடைந்தபோது தங்கத்தின் தேவையும் அதிகரித்தது. ஆனாலும், யூபிஎஸ் தலைமை நிர்வாகி செர்ஜியோ எர்மோட்டி, மொத்தமாக விற்பது ஒரு ஆபத்தான மோதல் என எச்சரித்துள்ளார்.
நிபுணர்கள் வெளியிட்ட தகவலின்படி, ஐரோப்பா பாதுகாப்பான வழிகளையே விரும்புகிறது. அமெரிக்கச் சொத்துக்களை விற்று நிதி அபாயத்தை ஏற்பதை விட, €93 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு சுங்கவரி விதித்தல் அல்லது வர்த்தக ஒப்புதல்களைத் தாமதப்படுத்துவதை அது விரும்பும்.
சுருக்கமாக, இந்த அச்சுறுத்தல் கோட்பாட்டளவில் இருந்தாலும், அரசியல் மோதல் உச்சத்தை எட்டாதவரை ஐரோப்பா அமெரிக்க சொத்துக்களை விற்க வாய்ப்பில்லை. தற்போதைக்கு, பொருளாதாரமே அரசியலை விட வலுவாக உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications